ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றிருந்த நிலையில் இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்.2ம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு நேற்றுடன் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் தமிழக அரசு தற்காலிக பணி நியமன அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த பிப்ரவரி 12 முதல் 20ம் தேதி வரை நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் இருந்து 2.5 லட்சம் பட்டதாரிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த தேர்வின் வழியே நியமிக்கப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, 3,236 ஆக உயர்த்தப்பட்டது. மேலும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, 69 சதவீத இட ஒதுக்கீட்டின்படி, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதை அடுத்து தேர்வர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்ப்பு செப்.2 ம் தேதி தொடங்கிய நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் டீசல் இல்லை என்ற அறிவிப்பு பலகை – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

இந்த சரிபார்ப்பு பணியில் டி.ஆர்.பி., தலைவர் லதா மேற்பார்வையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக் கல்வித் துறையை சார்ந்த, 400 பேர் குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 7000 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றுள்ளது. மேலும் ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இதுவரை மாவட்ட கல்வி அலுவலகங்கள் நடத்தி வந்த நிலையில், தற்போது டி.ஆர்.பி முதன்முறையாக நடத்தி உள்ளது. இதே போல் ஆசிரியர் பணிக்கு டி.ஆர்.பி., சார்பில் கணினி வழி தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு நியமனம் செய்யப்படுவதும் இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!