தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் படி ஆண் குடும்பத் தலைவராக உள்ள குடும்ப அட்டைகள் பெண் குடும்பத் தலைவர்களாக மாற்றம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு:
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ், 4 லட்சத்து 78 ஆயிரத்து 489 முன்னுரிமை குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 607 அட்டைகளில் பெண் குடும்பத் தலைவர்களாக உள்ளனர். மீதி 54 ஆயிரத்து 126 குடும்ப அட்டைகளில் ஆண்கள் குடும்பத் தலைவர்களாக உள்ளனர். மேலும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் 79 ஆயிரத்து 793 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 65 ஆயிரத்து 462 அட்டைகளில் பெண் குடும்பத் தலைவர்களாக உள்ளனர். மீதமுள்ள 13 ஆயிரத்து 973 அட்டைகளில் ஆண் குடும்பத் தலைவர்களாக உள்ளனர்.
தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – இன்று கடைசி நாள்!
இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி ஆண் குடும்பத் தலைவராக உள்ள குடும்ப அட்டைகளை பெண் குடும்பத் தலைவர்களாக மாற்றம் செய்யப்பட வேண்டும் சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். சேலம் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலமாக இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – இன்று முதல் துவக்கம்!
எனவே ரேஷன் அட்டைகளில் ஆண் குடும்ப தலைவராக உள்ள அட்டைகளை வைத்திருக்கும் 68 ஆயிரத்து 99 குடும்ப அட்டைதாரர்கள் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திலும் அல்லது அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக ரேஷன் அட்டைகளில் பெண் குடும்பத் தலைவராக மாற்றம் செய்து கொண்டு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உணவு பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். மேலும் பெண் குடும்பத் தலைவராக விண்ணப்பிக்க சரியான ஆவணங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள மின்னணு குடும்ப அட்டையில் உள்ள 18 வயது நிறைவடைந்த பெண் குடும்ப உறுப்பினர்கள் புகைப்படத்தை கொண்டு செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.