இந்தியாவில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தலைமை செயலாளர் உத்தரவு!

0
இந்தியாவில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தலைமை செயலாளர் உத்தரவு!
இந்தியாவில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தலைமை செயலாளர் உத்தரவு!இந்தியாவில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தலைமை செயலாளர் உத்தரவு!
இந்தியாவில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தலைமை செயலாளர் உத்தரவு!

நாட்டில் 75வது சுதந்திர தின விழா வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி மிக பிரமாண்டமாக கொண்டாட உள்ளதால், ஏற்பாடுகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினம்:

ஆகஸ்ட் 15 ம் தேதி ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் மிக முக்கியமான தினமாக கருதப்படுகிறது. இந்த நாளில் தான் இந்தியா ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திரம் அடைந்தது. இதற்காக ஏராளமான தொடர் போராட்டங்கள், உயிர் தியாகங்கள் போன்றவைகளால் இந்த சுதந்திரம் பெறப்பட்டுள்ளது. எனவே இந்த தினத்தில் ஒவ்வொரு இந்திய குடிமகனும், சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் மற்றும் போராடிய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும். இந்த வகையில் தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் 15, சுதந்திர தின கொண்டாட உள்ள நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் சில கிராம ஊராட்சிகளில் சாதிய பாகுபாடு காரணமாக தேசிய கொடி ஏற்றுவதில் பிரச்சனைகள் வருவதாக புகார்கள் வருவதை அடுத்து இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய கொடி ஏற்றுவதில் சாதிய பாகுபாடு காரணமாக பல பிரச்சனைகள் எழுவதால் தலைமை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில் கூறியதாவது, தீண்டாமை இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

CUET 2022 தேர்விற்கான நுழைவுச் சீட்டு எப்போது? NTA விளக்கம்!

இந்திய அரசியலமைப்பு சட்டம் 1989 ம் ஆண்டு சட்டத்தின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலினத்தவர், பழங்குடி இனத்தை சேர்ந்த நகராட்சி, ஊராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர் மற்றும் அலுவலக பணியில் இருக்கும் எவரையும், அவர்களது அலுவலக பணிகளையும், கடமைகளையும் செய்ய விடாமல் தடுப்பது சட்டப்படி குற்றமாகும். இதனால் வருகிற 75 வது சுதந்திர தின விழாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு அனைத்து ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்துவது உறுதி செய்ய வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து சுதந்திர தினத்தன்று நடைபெற இருக்கும் கிராம சபை கூட்டத்தில் சாதிய பாகுபாடு இன்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வதை, காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பிரச்சனைகளை கையாளுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண் அல்லது அலுவலர்களை அறிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here