விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – இனி ‘இந்த’ கட்டணம் இல்லை!

0
விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு - இனி 'இந்த' கட்டணம் இல்லை!
விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு - இனி 'இந்த' கட்டணம் இல்லை!
விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – இனி ‘இந்த’ கட்டணம் இல்லை!

விமான நிலையங்களில் வரும் பயணிகள் தங்களுடைய உடமைகளுக்கு போர்டிங் பாஸ் வாங்குவது மிகவும் அவசியம் ஆகும். இந்நிலையில் செக்-இன் கவுண்டரில் போர்டிங் பாஸ் வழங்கும் போது ஒருசில விமான நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிக்கின்றனர். இந்நிலையில் அந்த கட்டணம் குறித்து புகார் ஒன்று வெளியாகி இருக்கிறது.

கூடுதல் கட்டணம்

இந்தியாவில் உள்ள முன்னணி விமான நிறுவனங்கள் விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடமைகளுக்கு போர்டிங் பாஸ் வாங்கும் போது கட்டணம் வசூலிக்கிறது. இந்த போர்டிங் பாஸில் பயணியின் பெயர், செல்போன் எண், இமெயில் முகவரி, சீட் நம்பர், பிளேட் நம்பர், உள்பட சில விபரங்கள் இருக்கும். போர்டிங் பாஸ் என்பது விமானத்தில் பயணம் செய்யும் ஒவ்வொரு பயணிகளுக்கும் முக்கியமானதாகும். இந்நிலையில் செக் இன் கவுண்டர்களில் போர்டிங் பாஸ் பெறும் பயணிகளிடம் ஒரு சில விமான நிறுவனங்கள் கட்டணம் வசூல் செய்கிறது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் பல விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்த வண்ணம் இருக்கிறது. அதனால் இனி விமான நிறுவனங்கள் அதிகமாக கட்டணம் வசூலிக்க கூடாது என சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கூடுதல் தொகை பெறுவதற்கு விமான நிறுவனங்களின் விதிகளில் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விமான நிலையங்களில் உள்ள செக்-இன் கவுண்டர்களில் போர்டிங் பாஸ் வழங்குவதற்கு விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கை – நீதிபதி புதிய உத்தரவு!

இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் கோ ஃபர்ஸ்ட் போன்ற விமான நிறுவனங்கள், செக்-இன் கவுண்டரில் ஒரு பயணியிடம் போர்டிங் பாஸ் வகைக்காக தற்போது ரூ.200 கட்டணம் வசூலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்த நிறுவனங்கள் இந்த கட்டணத்தை வசூலிக்க கூடாது என MoCA (சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்) தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே இந்த கட்டணத்தை வசூலிக்கவில்லை என என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here