TN TRB முதுநிலை ஆசிரியர் தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
TN TRB முதுநிலை ஆசிரியர் தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TN TRB முதுநிலை ஆசிரியர் தேர்வு எழுதியோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TN TRB முதுநிலை ஆசிரியர் தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்ரவரி மாதம் நடத்திய முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்து முழு விவரத்தை இப்பதிவில் பார்க்கலாம்.

தேர்வு முடிவுகள்:

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

அதனை தொடர்ந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை-1, கணினி பயிற்றுனர்கள் நிலை-1 இல் இருக்கும் 2020-21 காலிப்பணியிடங்களுக்கான கணினி வழித்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த பணிகளின் நேரடி நியமனத்துக்காக நடந்த போட்டித் தேர்வின் உத்தேச விடைக்குறிப்பு கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளியிடப்பட்டது. அது குறித்து ஆட்சேபனைகளை ஏப்ரல் 13ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி 29 ஆயிரத்து 141 பேர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடப்பதால், விடைக்குறிப்பை மறு ஆய்வு செய்யும் பணிகள் முடிய ஒரு மாதம் தேவை. இந்த பணி முடிந்ததும் இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படும். அதன்பின் விடைத்தாள்கள் கணினி வழி திருத்தம் செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதற்கு குறைந்தபட்சம் 45 நாட்கள் தேவைப்படும். இதையடுத்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் ஜூலை இறுதியில் முடிவுகள் வெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!