தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அரசாணை வெளியீடு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அரசாணை வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அரசாணை வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 21ம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் நிலையில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் வருகிற 20ம் தேதி வரை பணிக்கு வர வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்து தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள்:

தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல்முறையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் மூடப்பட்டன. பின்பு நாளடைவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியது. இதை அடுத்து தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் 6ம் தேதி அறிவித்த தளர்வுகளில் தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் 30 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி என்று உத்தரவு பிறப்பித்தது.

தமிழக பேருந்துகளில் மீண்டும் இடம்பெறும் திருவள்ளுவர் புகைப்படம்? முதல்வர் ஆலோசனை!

இதன் காரணமாக தக்க கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி அரசு அலுவலகங்கள் இயங்கி வந்தன. ஆனால் மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி அவர்கள் அலுவலகங்களுக்கு பணிக்கு வர வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வராமல் வருகிற 21ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில் கல்வி படிப்புகள் சேர்க்கை – ஆய்வு மையம் அமைக்க உத்தரவு !!

அதன்படி அரசாணையில் தெரிவித்ததாவது, தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக ஜூன் 21ம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டதை வருகிற ஜூன் 20ம் தேதி வரை நீட்டிப்பு செய்து ஆணை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!