Wipro ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இந்த நாட்களில் WFH கிடையாது!

0
Wipro ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இந்த நாட்களில் WFH கிடையாது!
Wipro ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இந்த நாட்களில் WFH கிடையாது!
Wipro ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இந்த நாட்களில் WFH கிடையாது!

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ தனது ஊழியர்களுக்கு ஒர்க் ப்ரம் ஆப்ஷனை வழங்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனையடுத்து ஏராளமான பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் விப்ரோ இவர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

3 நாட்கள் வேலை:

உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவிய கொரோனா பெருந்தொற்று பெறும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அனைத்து நாடுகளும் ஊரடங்கு மற்றும் வேறு சில கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நிறுவனங்கள் தங்களது அலுவலக ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி வழங்கியது. தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்து நாட்டில் இயல்பு நிலை திரும்பி உள்ளதால் வீட்டிலிருந்து வேலை செய்யும் சலுகையை பல நிறுவனங்கள் நிறுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் மீண்டும் ஊழியர்களை தங்கள் அலுவலகங்களுக்கு வரவழைத்துள்ளது. அண்மையில் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் ஒர்க் ஃப்ரம் ஹோம் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டது. அந்த வகையில் அனைத்து பணியாளர்களும் வாரத்திற்கு குறைந்தது 3 நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று தெரிவித்தது. இது குறித்த அதிகாரபூர்வ மின்னஞ்சல் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டது. மேலும் இந்த ஆணைக்கு இணங்காதவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

தமிழகத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ!

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து தற்போது விப்ரோ நிறுவனமும் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்தில் வந்து பணிபுரிய விப்ரோ தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வரும் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும். மேலும் வாரத்தில் திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி என 4 நாட்கள் அலுவலகம் திறந்து தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்த விவரங்கள் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!