WhatsApp பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு – 2 அப்டேட்கள் அறிமுகம்!

1
WhatsApp பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு - 2 அப்டேட்கள் அறிமுகம்!
WhatsApp பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு - 2 அப்டேட்கள் அறிமுகம்!
WhatsApp பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு – 2 அப்டேட்கள் அறிமுகம்!

WhatsApp நிறுவனம் மேலும் இரண்டு அப்டேட்களை வெளியிட தயாராக இருக்கிறது. அதாவது, Whatsapp Web மற்றும் டெலிட் செய்த செய்தியை அறிந்துகொள்ளும்படியான அப்டேட்களை வெளியிட இருக்கிறது.

WhatsApp நிறுவனம்:

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் நிறுவனம் அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டபடியே இருந்து வருகிறது. இலவச வாய்ஸ் கால், வீடியோ கால், SMS வசதி என அனைத்து வசதிகளையும் வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இது போக பயனர்களின் செய்தியை பாதுகாப்பாக வைத்திருப்பதிலும் வாட்ஸ்ஆப் முக்கிய பங்கு வகிப்பதால் பில்லியன் கணக்கான பயனாளர்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாகவே ஏகப்பட்ட அப்டேட்களை வாட்ஸ்ஆப் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்து சில அப்டேட்களையும் வெளியிட தயாராக இருக்கிறது. அதாவது கூடிய விரைவில் Snap Chat போலவே அவதார் உருவங்களை தாமாகவே உருவாக்கி கொள்ளும்படியான அப்டேட் வெளியாக இருக்கிறது. மேலும், வாட்ஸ்ஆப் செயலியில் ஒருவர் Delete For Everyone செய்துவிட்டால் அந்த செய்தியை தெரிந்து கொள்ளும்படியான அப்டேட்டை வாட்ஸ்ஆப் கூடிய விரைவில் வெளியிட இருக்கிறது. ஆனால், அந்த செய்தியை நீக்கம் செய்த சில நிமிடத்திற்குள் மட்டுமே அந்த செய்தியை தெரிந்து கொள்ளும்படியான வசதி வழங்கப்படவுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

மேலும், வாட்ஸ்ஆப் செயலியை Laptop மற்றும் Desktop மூலமாக உபயோகப்படுத்துவதற்கான சில அப்டேட்டையும் வாட்ஸ்ஆப் வெளியிட இருக்கிறது. அதாவது, தற்போது வரைக்கும் Laptopல் Whatsapp Web மூலமாக லாகின் செய்த பிறகு மொபைல் அருகில் இருந்தால் மட்டுமே வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த முடியும். அதே போல உங்களது மொபைலில் ஆன்லைன் வரவில்லையெனில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது. ஆனால், தற்போது மொபைல் அருகில் இல்லையென்றாலும், மொபைலில் ஆன்லைன் வரவில்லையென்றாலும் கூட Whatsapp Web மூலமாக Laptop மற்றும் Desktop ல் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!