WhatsApp பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிதாக 6 அப்டேட்கள் அறிமுகம்!

0
WhatsApp பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு - புதிதாக 6 அப்டேட்கள் அறிமுகம்!
WhatsApp பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு - புதிதாக 6 அப்டேட்கள் அறிமுகம்!
WhatsApp பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிதாக 6 அப்டேட்கள் அறிமுகம்!

WhatsApp செயலியில் அடுத்தடுத்து பல அப்டேட்கள் வந்தபடியே தான் இருக்கின்றன. இந்நிலையில், WhatsApp நிறுவனம் புதிதாக 6 அப்டேட்களை வழங்க திட்டமிட்டுள்ளது. பயனர்களுக்கு புதிதாக என்னென்ன அப்டேட் கிடைக்க போகிறது என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

WhatsApp அப்டேட்:

உலகம் முழுவதும் உள்ள பில்லியன் கணக்கான பயனாளிகள் WhatsApp செயலியை உபயோகம் செய்து வருகின்றனர். இந்த பயனாளர்களின் வசதியாகவே வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது மாற்றங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் ஆறு முக்கிய அப்டேட்களை வழங்க திட்டமிட்டுள்ளது. அதாவது, வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து ஒருவர் வெளியேறினால் யார் வெளியேறுகிறார் என்பது தெரியாத வகையில் புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப் வழங்க இருக்கிறது. எப்போதுமே குரூப்பில் இருந்து ஒருவர் வெளியேறும்போது பயனாளி Left என காண்பிக்கப்படும். அது தெரியாத வகையில் கூடிய விரைவில் புதிய அப்டேட் வர இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இதனையடுத்து, ஒருவருக்கு அனுப்பும் செய்தியை 24 மணி நேரம், 7 நாட்கள் அல்லது 90 நாட்களுக்குள் நீக்கும்படியான அப்டேட்டை வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் வழங்கியது. அதாவது, ஒருவரின் விருப்பத்திற்கு தகுந்தாற் போல வாட்ஸ்அப் செட்டிங்கை மாற்றி கொள்ளலாம். இந்நிலையில், ஒருவர் அந்த செய்தியை நீக்குவதற்கு முன்பே அதனை சேமித்து கொள்வதற்கான வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்க இருக்கிறது. இதனையடுத்து, வீடியோ கால் செய்யும் போது அதில் அவதார் போன்ற ஈமோஜிகளை சேர்த்துக்கொள்ளும்படியான வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்க இருக்கிறது.

தமிழக தனியார் பள்ளிகளில் கட்டணத்தில் விலக்கு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

இதனையடுத்து, நீங்கள் ஆன்லைனில் இருப்பதை யார் யாரெல்லாம் பார்க்கலாம் மற்றும் மறைக்க விரும்பினால் மறைத்துக்கொள்ளும்படியான வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்க இருக்கிறது. ஆனால், Last seen ஐ மறைக்க முடியாது. ஆன்லைனில் இருப்பதை மட்டும் மறைத்து கொள்ளலாம். இதனையடுத்து, வாட்ஸ்அப்பில் வாய்ஸ் நோட் அனுப்பும்போது waveform வடிவில் வழங்க வாட்ஸ்அப் முடிவெடுத்துள்ளது. கூடிய விரைவில் இந்த புதிய அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்க திட்டமிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!