ரயில்களில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு – மஞ்சள் நிற பலகை குறித்த விபரங்கள்!

0
ரயில்களில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு - மஞ்சள் நிற பலகை குறித்த விபரங்கள்!
ரயில்களில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு - மஞ்சள் நிற பலகை குறித்த விபரங்கள்!
ரயில்களில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு – மஞ்சள் நிற பலகை குறித்த விபரங்கள்!

ரயில் நிலையங்களுக்கு நாம் செல்லும் போது நீளமான மஞ்சள் நிற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதை நாம் பார்த்திருப்போம். இதன் பின்னணி அதில் குறிப்பிட்டுள்ள பிற விவரங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

மஞ்சள் நிற பலகை:

இந்தியாவில் பேருந்து, விமானம், வேன், கார் போன்ற பல போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் பெரும்பாலும் மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். குறிப்பாக தொலைதூர பயணங்களில் மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். கொரோனா பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் மீண்டும் முழுவதுமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது பயணிகளின் வசதிக்காக முன்பதிவு இல்லாத ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

தற்போது ரயில் நிலையங்களில் உள்ள மஞ்சள் நிற பெயர் பலகை குறித்த தகவல்களை தெரிந்து கொள்வோம். அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் மஞ்சள் நிற பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கும். இதில் கருப்பு நிறத்தில் அந்தந்த ஊரின் பெயர் எழுதப்பட்டிருக்கும். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உள்ளூர் மொழி என்று மொத்தம் 3 மொழிகளில் ஊரின் பெயர் எழுதப்பட்டிருக்கும். இந்த பெயர் பலகையில் கடல் மட்டத்தில் இருந்து அந்த ஸ்டேஷன் எவ்வளவு உயரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடப்பட்டிருக்கும்.

அரசு அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் புகார் – தீர்வு கிடைக்குமா? உண்மை நிலவரம்!

அதாவது MSL (Mean Sea Level) என்று எழுதப்பட்டிருக்கும். இந்திய ரயில்வே மூலமாக இயக்கப்படும் ரயில்களில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் மனதில் வைத்துதான் இந்த MSL என்று குறிப்பிடப்படுகிறது. என்ன உயரத்தில் பயணித்து கொண்டிருக்கிறோம் என்பதை லோகோ பைலட்கள் (ரயில் ஓட்டுனர்கள்) மற்றும் கார்டுகள் தெரிந்து கொள்வதற்கு MSL உதவுகிறது. அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் பெயர் பலகைகள் மஞ்சள் நிறத்தில் எழுதப்பட்டு இருப்பதற்கு காரணம் தூரத்தில் இருந்து பார்த்தால் கூட கண்களுக்கு தெரியும் என்பது தான்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here