TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – திருத்தப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு!

0
TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - திருத்தப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு!
TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - திருத்தப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு!
TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – திருத்தப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 மற்றும் VAO தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

TNPSC தேர்வு

தமிழக அரசுத்துறையில் காலியாக இருக்கும் ஒவ்வொரு பணியிடங்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரவிருக்கும் 2022ம் ஆண்டிற்கான TNPSC போட்டித் தேர்வுகள் குறித்த வருடாந்திர கால அட்டவணை கடந்த மாதத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த அட்டவணையின் படி குரூப் 4 மற்றும் VAO நிலைகளில் காலியாக இருக்கும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட இடங்களுக்கு போட்டித்தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு? ஓமிக்ரான் பரவல்! பொதுமக்கள் அச்சம்!

இதற்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து குரூப் 4 மற்றும் VAO தேர்வுக்காக லட்சக்கணக்கானவர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் TNPSC குரூப் 4 மற்றும் VAO தேர்வர்களுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 300 மதிப்பெண்கள் அடங்கிய குரூப் 4 தேர்வுக்கு SSLC தரத்தை வைத்து அதவது 10ம் வகுப்பு தரத்தை வைத்து இந்த பாடத்திட்டங்கள் வெளியாகியுள்ளது.

அதன் படி, தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் ஆகிய பிரிவுகளில் இருந்து சுமார் 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் கேட்கப்பட இருக்கிறது. இதனை தொடர்ந்து பொது அறிவு பகுதியில் கேட்கப்படும் கொள்குறி வினாக்களுக்கு பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு, இந்திய ஆட்சியியல், பொருளாதாரம், தேசிய இயக்கம், தமிழ்நாட்டின் வரலாறு.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து ஓய்வெடுத்த மீனா ஹேமா – ஆன்மீக சுற்றுலா!

பண்பாடு, மரபு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், திறனறிவு, மனக்கணக்கு, நுண்ணறிவு போன்ற பிரிவுகளில் இருந்து 150 மதிப்பெண்களுக்கு 100 வினாக்கள் கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களையும் https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/G4_Scheme_Revised_27122021.pdf என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளும்படி தேர்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!