TN TRB தேர்வு எழுதியோர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சான்றிதழ் சரிபார்ப்பு! பட்டியல் வெளியீடு!

0
TN TRB தேர்வு எழுதியோர்களுக்கு முக்கிய அறிவிப்பு - சான்றிதழ் சரிபார்ப்பு! பட்டியல் வெளியீடு!
TN TRB தேர்வு எழுதியோர்களுக்கு முக்கிய அறிவிப்பு - சான்றிதழ் சரிபார்ப்பு! பட்டியல் வெளியீடு!
TN TRB தேர்வு எழுதியோர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சான்றிதழ் சரிபார்ப்பு! பட்டியல் வெளியீடு!

தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றது. தற்போது இது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

பட்டியல் வெளியீடு:

தமிழகத்தில் கடந்த 2020 ஆண்டு முதல் பரவ தொடங்கிய கொரோனா பெருந்தொற்றால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் மாணவர்களின் கற்றலில் தொய்வு ஏற்பட கூடாது என்பதற்காக ஆன்லைன் வாயிலாக கற்றல், கற்பித்தல் தொடர்ந்து நடைபெற்றது. கிட்டத்தட்ட ஓராண்டிற்கு பிறகு கொரோனா தாக்கம் குறைந்தவுடன் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு முழு நேர வகுப்புகள் வழக்கம் போல நடைபெற தொடங்கியது. மீண்டும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையானது அதிகரித்தது.

குறிப்பாக மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) தகுதித் தேர்வு நடத்த முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பபதிவுகள் நடைபெற்று கடந்த பிப்ரவரி மாதம் கணினி வாயிலாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அடுத்த கட்ட பணியாக விண்ணப்பதாரர்கள் இணையத்தளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது.

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

Exams Daily Mobile App Download

இதனையடுத்து கடந்த 2ம் தேதி சென்னை தலைமை அலுவலக வளாகத்தில் புவியியல், இயற்பியல், வரலாறு ஆகிய பாடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இதில் தற்காலிகமாக தகுதிபெற்ற 341 பட்டதாரிகளின் பட்டியலை தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதனால் தேர்வர்கள் விவரங்களை இணையத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என்றும் மேற்கண்ட பாடங்களை தவிர பிற பாடங்களில் தோ்வு பெற்றவா்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here