TN TRB தேர்வு எழுதியோருக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் தகவல்!

0
TN TRB தேர்வு எழுதியோருக்கு முக்கிய அறிவிப்பு - தேர்வாணையம் தகவல்!
TN TRB தேர்வு எழுதியோருக்கு முக்கிய அறிவிப்பு - தேர்வாணையம் தகவல்!
TN TRB தேர்வு எழுதியோருக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் தகவல்!

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது சான்றிதழ் சரிபார்ப்புக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வந்த நிலையில் அரசு தளர்வுகளை அறிவித்து வந்தது. இந்த நிலையில் பள்ளிகளை திறக்கவும் அரசு அனுமதி அளித்தது. அப்போது அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் உடற்கல்வி இயக்குனர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை – 1 பதவிகளுக்கான தேர்வு கணினி வழியில் நடைபெற்றது. சுமார் 190 தேர்வு மையங்களில் 2.30 லட்சம் பேர் இத்தேர்வை எழுதியது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது சான்றிதழ் சரிபார்ப்பிற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தாங்கள் தமிழ் வழியில் பயின்றதற்கான ஆவணங்களை ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையில் தெரிவித்துள்ளவாறு உரிய படிவத்தை பெற்று வைத்திருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

மீண்டும் சிக்கலில் மாட்டிக்கொண்ட பாக்கியா, அடுத்தகட்ட முடிவு என்ன? புதிய திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!

இதில் விண்ணப்பத்தில் ஏற்கனவே தமிழ் வழி ஒதுக்கீட்டுக்கான கோரிக்கைக்கு ‘ஆம்’ என பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது ஆவணங்களை இணையதளத்தில் 22.08.2022 முதல் 25.08.2022 பிற்பகல் 5 மணி வரை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2,207 ஆக இருந்த காலிப்பணியிடங்கள் தற்போது 1,030 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்தம் 3,237 பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!