TN TRB தேர்வெழுத உள்ளோர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் வெளியிட்ட தகவல்!
தமிழகத்தில் TNPSC போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் 40% மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது TRB விரிவுரையாளர் தேர்விலும் தமிழை தகுதித்தேர்வாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழ்மொழி தேர்வு:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு வருடங்களாக போட்டித்தேர்வுகள் நடைபெறவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் திருப்ப பெறப்பட்டுள்ளதால் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் 2022ம் ஆண்டுக்கான போட்டித்தேர்வை நடத்த திட்டமிட்டது. இதனையடுத்து 2022 ஜனவரி மாதம் TNPSC தேர்வர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியது. மேலும், இந்த ஆண்டு 32 வகையான போட்டித் தேர்வுகளை நடத்த உள்ளதாக தேர்வாணையம் தெரிவித்தது. அதன் படி முதல் கட்டமாக குரூப் 2,2A தேர்வு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து குரூப் 4 & VAO தேர்வும் நடைபெற்றது.
இந்த ஆண்டு முதல் TNPSC தேர்வுகளில் மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்து தேர்வாணையம் தமிழ் மொழி தேர்வை கொண்டு வந்துள்ளது. தமிழக அரசு துறைகளில் 100% தமிழக இளைஞர்களை நியமிக்கும் நோக்கில் இந்த தமிழ் மொழித்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தமிழ் மொழி தகுதித் தேர்வு மதிப்பீட்டு தகுதித் தேர்வாக அமைக்கப்பட்டுள்ளது. அதனால் தகுதிதேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெறுவது அவசியம். அப்போது தான் தேர்வின் பிற பாட வினாக்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 5ஜி ரீசார்ஜ் திட்டங்களுக்கு அதிக விலையா? முக்கிய தகவல்கள் இதோ!
Exams Daily Mobile App Download
இந்த தமிழ் மொழித் தகுதி தேர்வு வினாக்கள் பத்தாம் வகுப்பு பாட தரத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் விரிவுரையாளர் தேர்விலும் தமிழ் மொழி தகுதித் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. விரிவுரையாளர் பணிக்கான தகுதித் தேர்வு எழுதுபவர்கள் தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ்மொழித் தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடைபெறவுள்ளது. இத்தேர்வில் 20 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்