TN TRB தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நாளை(அக்.13) கலந்தாய்வு! தேர்வாணையம் தகவல்!

0
TN TRB தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - நாளை(அக்.13) கலந்தாய்வு! தேர்வாணையம் தகவல்!
TN TRB தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - நாளை(அக்.13) கலந்தாய்வு! தேர்வாணையம் தகவல்!
TN TRB தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நாளை(அக்.13) கலந்தாய்வு! தேர்வாணையம் தகவல்!

தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,849 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டு தற்போது பணி நியமன கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வந்த நிலையில் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் உடற்கல்வி இயக்குனர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை – 1 பதவிகளுக்கான தேர்வு கணினி வழியில் நடைபெற்றது. இந்த தேர்வானது தமிழகம் முழுவதும் 190 மையங்களில் நடைபெற்றது. மேலும் 2.30 லட்சம் பேர் இத்தேர்வை எழுதியது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. மேலும் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தங்களின் தமிழ் வழி சான்றிதழை இணையத்தில் பதிவேற்றம் செய்யவும் தேர்வு வாரியம் உத்தரவிட்டது. அத்துடன் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஆகஸ்ட் 27ம் தேதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் பணி நாடுநர்களுக்கு நேரடி நியமன கலந்தாய்வு வரும் அக். 13ம் தேதி நடைபெற உள்ளது. இவர்களுக்கான தெரிவு பட்டியல் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஆண்டு இத்தனை நாட்கள் அரசு விடுமுறை – பட்டியல் வெளியீடு!

Exams Daily Mobile App Download

மேலும் பட்டியலில் உள்ளவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட கடிதம், அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் நேரடியாக வர வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த கலந்தாய்வானது சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் காலை 9 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!