தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – பள்ளி கல்வித்துறை தகவல்!

0
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு - பள்ளி கல்வித்துறை தகவல்!
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு - பள்ளி கல்வித்துறை தகவல்!
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – பள்ளி கல்வித்துறை தகவல்!

தமிழகத்தில் 4 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பதிவேடுகளை பராமரிப்பதில் ஆசிரியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், சில குறிப்பிட்ட பதிவேடுகளை பராமரிக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக மாணவர்களுக்கு சரியாக பாடங்கள் கற்பிக்கப்படவில்லை. இதனால், மாணவர்களின் கல்வித்திறன் மிகவும் பாதிப்படைந்துவிட்டது. மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் பொருட்டு ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வித்திறனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு நாளும் வகுப்பில் மாணவர்களின் செயல்திறன், வருகை பதிவு மற்றும் கற்பிக்கப்பட்ட பாடத்திட்டங்களை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க முடியாமல் முழுக்க முழுக்க பதிவேடுகளை தயார் செய்வதிலேயே முழு நேரமும் சென்றுவிடுவதாக தெரிவித்துள்ளனர். மேலும், ஆசிரியர் ஒருவர் பதிவேடுகளை பதிவு செய்வதற்கான வேலையை வீட்டில் வைத்து செய்வதாகவும், இதனால் குடும்பத்தை கவனித்து கொள்ள முடியவில்லை என்றும், குடும்பத்துடன் நேரம் செலவிட முடியவில்லை எனவும் கூறி அழுதபடி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – இனி இலவச அரிசி & கோதுமை கிடையாது?

Exams Daily Mobile App Download

இதனால், ஆசிரியர்களின் கூடுதல் சுமையை குறைக்கும் பொருட்டு கருவூல பதிவேடு, சம்பள பிடித்தம் பதிவேடு, கூடுதல் பண பதிவேடு, நிரந்தர சம பதிவேடு, நிலுவையில் உள்ள சிறப்பு கட்டண பதிவேடு, அபராத பதிவேடு, பில் பதிவேடு, தற்காலிக பதிவேடு உள்ளிட்ட 11 பதிவேடுகளை ஆசிரியர்கள் இனி தயார் செய்ய தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவேடுகளை தவிர்த்து பாட குறிப்பேடு பதிவேடுகளை பராமரித்தால் மட்டும் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!