தமிழக பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – மண்டல ஆய்வு பணி! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

0
தமிழக பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு - மண்டல ஆய்வு பணி! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழக பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு - மண்டல ஆய்வு பணி! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழக பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – மண்டல ஆய்வு பணி! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் மண்டல ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனையடுத்து பள்ளிகளுக்கு சில முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் ஆய்வு:

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் நோக்கம் மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரி செய்து கல்வி திறனை மேம்படுத்துவதே ஆகும். அதே போல நிர்வாகத்திலும் புதிய முறைகள் கையாளப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து பதிவு பணிகளும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் TNSED – SCHOOL என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்கள் வருகை பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மண்டல ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனையடுத்து பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

வழிகாட்டு நெறிமுறைகள்:

  • பள்ளிகளில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு முன்பு பள்ளிக்கு வருகை தர வேண்டும்.
  • பள்ளிகளில் எந்த நிகழ்வு நடந்தாலும் அதனை உடனடியாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
  • பள்ளியில் வழங்கப்படும் சத்துணவை தினமும் சரிபார்த்து அதன் பிறகே மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

அதீத கனமழை காரணமாக ‘ரெட்’ அலர்ட் – வானிலை மையம் முக்கிய தகவல்!

  • பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கும் போது அதனை மாவட்ட கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.
  • EMIS சார்ந்த பணிகளை உடனடியாக செய்து முடிக்கப்பட வேண்டும்.
  • தலைமை ஆசிரியர் தினமும் 2 பாட வேளையை உற்று நோக்க வேண்டும். மேலும் அரசு பள்ளியில் தீத்தடுப்பு சாதனம் கட்டாயம் இருக்க வேண்டும்.
  • மாணவர்களின் நலன் பாதிக்கும் வண்ணம் தண்டனை வழங்கப்பட கூடாது.
  • பள்ளிகளில் பெயர் பலகை மற்றும் வகுப்பறை வெள்ளையடித்து தூய்மையாக இருக்க வேண்டும்.
  • ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன் உபயோகப்படுத்தினால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!