தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஒரே தவணையில் பொருட்கள்!!ஆரவாரத்தில் மக்கள்!!

0
தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கான முக்கிய அறிவிப்பு - ஒரே தவணையில் பொருட்கள்!!ஆரவாரத்தில் மக்கள்!!
தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கான முக்கிய அறிவிப்பு - ஒரே தவணையில் பொருட்கள்!!ஆரவாரத்தில் மக்கள்!!
தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஒரே தவணையில் பொருட்கள்!!ஆரவாரத்தில் மக்கள்!!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரே தவணையில் அரிசி உட்பட அனைத்து பொருட்களும் வழங்க வேண்டும் என்று உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. அரசின் இத்தகைய உத்தரவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

நியாயவிலை பொருட்கள்:

கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. மேலும் இந்த பொதுமுடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் தினக்கூலி வேலை பார்க்கும் மக்கள் வருமானம் இல்லாததால் உணவு உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கு கூட சிரமப்பட்டு வந்தனர். அதனால் மத்திய அரசு மக்களுக்கு நலன் அளிக்கும் வகையில் பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை அமல்படுத்தியது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குட்டி பாண்டியனுடன் தனம் அண்ணி – வைரல் புகைப்படம்!

இந்த திட்டத்தின் மூலம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்களுடன் கூடுதலாக வழங்க 5 கிலோ அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த திட்டம் மூலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஜூலை வரை மூன்று மாதங்களுக்கு இலவசமாக ரேஷன் கடைகள் மூலம் குறிப்பிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. பின்னர் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக இந்த நடைமுறை தொடரப்பட்டது.

ஆரோக்கிய அட்டைதாரர்களுக்கு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை – குடும்ப நலத்துறை அறிவிப்பு!

இத்தகைய திட்டத்தின் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள 80.96 கோடி பேர் பயனடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த திட்டமானது வரும் மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரே தவணையில் வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here