தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மகப்பேறு விடுப்பு குறித்த முழு விவரம்!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மகப்பேறு விடுப்பு குறித்த முழு விவரம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மகப்பேறு விடுப்பு குறித்த முழு விவரம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மகப்பேறு விடுப்பு குறித்த முழு விவரம்!

தமிழக அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் பெண் அரசு ஊழியர்களுக்கு 12 மாத கால மகப்பேறு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் மகப்பேறு விடுப்பில் இருக்கும் பெண் அரசு ஊழியர் சொந்த விருப்பத்தின் பேரில் பணிமாறுதல் பெற்றால் அவர்கள் புதிய பணி இடத்தில் மகப்பேறு விடுமுறையை தொடர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகப்பேறு விடுமுறை:

தமிழக அரசின் கீழ் செயல்படும் துறைகளில் பணியாற்றி வரும் திருமணம் முடிந்த பெண் ஊழியர்களுக்கு இரண்டு குழந்தைகள் வரை 6 மாத காலம் வரை மகப்பேறு விடுமுறை ஊதியத்துடன் வழங்கப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 6 மாத காலம் மகப்பேறு விடுமுறை கொடுக்கப்பட்ட நிலையில் அதன் பின் 9 மாதங்களாக அதாவது 270 நாட்களாக உயர்த்தப்பட்டது. இந்த விடுப்பு பிரசவத்துக்கு முன், பின் என பிரித்து எடுத்துக் கொள்ளவும், விடுப்பு காலத்தில் முழு சம்பளம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு முதல் அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை 9 மாத காலத்தில் இருந்து 12 மாத காலம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் படி ஊழியர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்னதாகவே மகப்பேறு விடுமுறையில் இருந்தால் அவர்கள் 12 மாதம் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி ஊழியர்கள் மகப்பேறு விடுப்பில் இருக்கும் போது பணிமாறுதல் செய்து கொண்டால் அதை புது பணியிடத்தில் தொடரலாம் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

10 வது முடித்தவர்க்கு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிவாய்ப்பு – இன்றே விண்ணப்பியுங்கள்..!

இந்த மனுவிற்கு தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் தமிழக அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்து தமிழ்நாடு அடிப்படை விதிகளில் விதி 101ல் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன் படி மகப்பேறு விடுப்பில் இருக்கும் பெண் அரசு ஊழியர் சொந்த விருப்பத்தின் பேரில் பணிமாறுதல் பெற்றால் புதிய பணியிடத்தில் மகப்பேறு விடுப்பை தொடர்ந்து கொள்ள வழிவகை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!