ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆயுள் சான்றை சமர்ப்பிக்க புதுவசதி!

0
ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஆயுள் சான்றை சமர்ப்பிக்க புதுவசதி!
ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஆயுள் சான்றை சமர்ப்பிக்க புதுவசதி!
ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆயுள் சான்றை சமர்ப்பிக்க புதுவசதி!

மத்திய அரசு ஊழியர்கள் பணி நிறைவு பெற்றால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஓய்வூதியத்தை பெற ஆண்டுதோறும் தங்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி 2022 – 23 ஆண்டுக்கு ஆயுள் சான்றை சமர்ப்பித்த பின் தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது. தற்போது இதனை இணைய வழியில் சமர்ப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஓய்வூதியம்

அரசு ஊழியர்களுக்கு அவர்களின் ஓய்வு காலத்தில் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மேலும் இதனை கடந்த 2004ம் ஆண்டு ரத்து செய்து தேசிய ஓய்வூதியத் திட்டம் என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்யப்பட்டு அவர்களின் PF கணக்கின் கீழ் அத்தொகை சேமிக்கப்படுகிறது. மேலும் இதில் அரசு சார்பாகவும் கூடுதல் தொகை செலுத்தப்படுகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் தொகையானது அவர்களின் பணிக்காலம் நிறைவடையும்போது வழங்கப்படுகிறது.

Post Office இல் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – இதை உடனே பண்ணுங்க!

மேலும் இது கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தால் வழங்கப்படுகிறது. இதில் 60 வயது நிரம்பிய பணி நிறைவு பெற்ற பணியாளர்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர். அத்துடன் தற்போது ஓய்வூதியம் பெற விரும்புவர்கள் ஆண்டுதோறும் தங்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி சரியான நபர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய முடிகிறது. மேலும் இது குறித்து சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் சங்கீதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சொன்ன விளக்கம்!

இவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, 2022-23 ஆண்டுக்கான ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் தான் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தற்போது இந்த சான்றிதழை ஆன்லைன் முறையில் பதிவேற்றம் செய்யலாம். இதற்கு முதலாவதாக http://tnuwwb.in.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று ‘பென்ஷனர் லைப் சர்டிபிகேட்’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதில் பதிவு எண், மொபைல் போன் உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டும். அத்துடன் ஆதார், ரேஷன் கார்டு, ஓய்வூதிய ஆணை, வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை உள்ளிட வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற 0427 2402646 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!