ரேஷன் கார்டுதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கோதுமை விநியோகம் நிறுத்தம்!
நாட்டில் கோதுமை விளைச்சல் மிகவும் பாதிப்படைந்துள்ளதால் அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் கோதுமை விநியோகம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோதுமைக்கு பதிலாக அரிசி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
கோதுமை விநியோகம்:
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலமாக நாட்டில் உள்ள அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் இலவச அரிசி, கோதுமை முதலான பல ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக மாதந்தோறும் 81 கோடி மக்களுக்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஆண்டுதோறும் சுமார் 25-26 மெட்ரிக் டன் கோதுமை பயன்படுத்தப்பட்டு வருகிறது. எந்த ஆண்டுக்கும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு கோதுமை விளைச்சல் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்தாண்டில் மட்டுமே 42% கோதுமை உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் மத்திய அரசு கோதுமை ஒதுக்கீட்டை குறைத்து அரிசிக்கான ஒதுக்கீட்டை உயர்த்தியுள்ளது. பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இத்தகைய ஏற்பாடு முன்னதாகவே செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு கோதுமை குறைவான அளவே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோதுமையின் அளவை குறைத்ததால் அரிசி வழக்கத்தை விட அதிகமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TCS நிறுவனத்தில் 1000 காலிப்பணியிடங்கள் – ரூ.3,26,000/- வரை ஆண்டு ஊதியம்..!
மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பல மாநிலங்களில் கோதுமை குறைவான அளவே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு கோதுமையின் விளைச்சலை பொறுத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு கோதுமை விநியோகம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி, மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அரிசி விநியோகம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.