ரேஷன் கார்டுதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புகார் அளிப்பதற்கான வழிமுறைகள்!

0
ரேஷன் கார்டுதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு - புகார் அளிப்பதற்கான வழிமுறைகள்!
ரேஷன் கார்டுதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு - புகார் அளிப்பதற்கான வழிமுறைகள்!
ரேஷன் கார்டுதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புகார் அளிப்பதற்கான வழிமுறைகள்!

ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை என்றாலோ, ரேஷன் பொருட்களை வாங்குவதில் ஏதேனும் சிறிய சிக்கல் இருந்தாலும் கூட புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு

தமிழகத்தில் பொது வினியோகத் திட்டத்தின் மூலமாக ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் முதலான அனைத்து ரேஷன் பொருட்களையும் மலிவு விலையில் வாங்கி பயனடைந்து வருகின்றனர். மேலும், மத்திய அரசின் அனைத்து உதவிகளும் ரேஷன் கார்டுகள் வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மத்திய அரசின் பிஎம் கரிப் கல்யாண் யோஜனா என்கிற திட்டத்தின் மூலமாகவும் மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆதார் கார்டு மூலமாகவும் இந்த திட்டத்தின் மூலமாக ரேஷன் பொருட்களை பெற முடியும்.

TN Job “FB  Group” Join Now

இதனிடையே, அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் சமமாக ரேஷன் பொருட்கள் சென்றடைய வேண்டும் என்பதே பொது விநியோக திட்டத்தின் நோக்கமாகும். ஆனால், சில ரேஷன் கடைகளில் அனைத்து மக்களுக்கும் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவது இல்லை எனவும், ரேஷன் பொருட்களை கள்ள சந்தையில் விற்பனை செய்கிறார்கள் எனவும் குற்றசாட்டு எழுந்து வருகிறது. ஆனாலும், முறையாக இதனை தெரிவிக்காமல் அப்படியே விட்டு விடுகின்றனர். மேலும், சிலர் ரேஷன் பொருட்களை வாங்காமல் அப்படியே விட்டு விடுகின்றனர்.

அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 17 வரை விடுமுறை நீட்டிப்பு – காரணம் இது தான்!

இந்நிலையில், ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை என்றாலோ, ரேஷன் பொருட்களை வாங்குவதில் சிறிய சிக்கல் இருந்தாலும் கூட ஆன்லைன் மூலமாகவே வீட்டில் இருந்தபடியே புகார் அளிக்க முடியும். அதாவது, https://nfsa.gov.in/State/TN என்கிற இணையதள முகவரியின் மூலமாகவோ அல்லது [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரியின் மூலமாகவோ புகார் அளிக்கலாம். இது தவிர 1967 அல்லது 1800-425-5901, 04325665566, 04428592828 என்கிற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம். இப்படி புகார் அளித்தும் கூட பலன் கிடைக்கவில்லை என்றால் நேரடியாக உங்கள் அலுவலக முகவரிக்கு சென்று புகார் கொடுக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!