ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய சேவை அறிமுகம்!

0
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு - புதிய சேவை அறிமுகம்!
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு - புதிய சேவை அறிமுகம்!
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய சேவை அறிமுகம்!

ரயில் பயணிகளுக்கான புதிய சேவைகளை ரயில்வே நிர்வாகம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. மேலும், அதற்கான சில நிபந்தனைகளையும் IRCTC தற்போது வெளியிட்டுள்ளது.

ரயில்வே நிர்வாகம்:

பேருந்து போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்தில் தான் செலவு கம்மி என்பதால் பலரும் ரயிலில் தான் பயணம் செய்ய நினைக்கின்றனர். இந்திய ரயில்வே சேவை திட்டத்தின் மூலமாக தினமும் 40 கோடிக்கும் மேலான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். மேலும், அவ்வப்போது ரயில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் அம்சங்கள் ரயில்வே நிர்வாகத்தால் ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது IRCTC பயணிகளின் வசதிக்காக பல புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் 3 வரை டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பெரும்பாலும் ரயிலில் வேலைக்கு செல்பவர்கள், அன்றாட கடை வியாபாரம் செய்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைவருமே பயணம் செய்கின்றனர். ஒரு சில நேரங்களில் ரயில் டிக்கெட் எடுத்த பிறகு ரயிலை தவறவிடும்படியாக ஆகி விடுகிறது. இதற்காகவே ரயில்வே நிர்வாகம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, ரயில் பயணிகள் அவர்கள் பதிவு செய்திருந்த ரயில் நிலையத்திற்குப் பதிலாக வேறு எந்த ரயில் நிலையத்திலிருந்து வேண்டுமானாலும் ரயிலைப் பிடிக்கலாம் என IRCTC அறிவித்துள்ளது. இதற்கு முன்பு, இதே போல வேறு ரயில் நிலையத்தில் இருந்து ரயிலை பிடித்தால் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.

Exams Daily Mobile App Download

ஆனால், இனிமேல் அபராதம் விதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரயில்வே நிர்வாகம் இதற்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அதாவது, பதிவு செய்திருந்த ரயில்வே நிலையம் தூரமாக இருக்கிறது என்று நினைத்தால் 24 மணி நேரத்திற்கு முன்பாக ஆன்லைன் மூலமாக போர்டிங் ஸ்டேஷன் விபரங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆன்லைன் மூலமாக போர்டிங் ஸ்டேஷன் விவரங்களை மாற்றாமலேயே பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மூலமாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here