ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – விரைவு ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!

0
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு - விரைவு ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு - விரைவு ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – விரைவு ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!

சென்னை சென்ட்ரல் முதல் ஜெய்ப்பூர் செல்லும் விரைவு ரயில் (12967)ன் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவை:

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மீண்டும் அனைத்து ரயில்களும் வழக்கம் போல ஓடி கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் நீண்ட தூரம் பயணிக்க விரும்புபவர்கள் ரயிலில் தான் பயணம் செய்ய விரும்புகின்றனர். அதாவது, பயண செலவும் குறைவு, கழிப்பறை வசதி போன்ற காரணங்களால் பலரும் ரயில் சேவைகளை தான் விரும்புகின்றனர். இதற்கு ஏற்றார் போலவே ரயில் பயணிகளுக்காக பல கூடுதல் சேவைகளும் ரயில்வே நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷன் கடைகளில் கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம்? கூட்டுறவு துறை அறிவிப்பு!

எப்போதுமே, ரயில் வழித்தடங்களில் ஏதேனும் விபத்து, ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள், வெள்ளப்பெருக்கு போன்ற காரணங்களால் மட்டுமே ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்படுகிறது அல்லது சில குறிப்பிட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், ரயில்கள் ரத்து செய்யப்படுவதற்கு முன்பாகவே பயணிகளிடம் ரயில் சேவைகள் ரத்து என்பது குறித்தான விவரங்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை சென்ட்ரல் முதல் ஜெய்ப்பூர் செல்லும் முக்கிய ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது, சென்னை முதல் ஜெய்ப்பூருக்கு வாரம் இருமுறை செல்லும் விரைவு ரயில் (12967) எப்போதும் சென்னையில் இருந்து 5.40மணிக்கு கிளம்பும். ஆனால், தற்போது இணை ரயில் தாமதமாக வந்த காரணத்தினால் சென்னை சென்ட்ரல் – ஜெய்ப்பூர் விரைவு ரயில் (12967) 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, மாலை 5.40-க்கு கிளம்ப வேண்டிய ரயில் மாலை 6.30-க்கு புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here