மின்சார, விரைவு ரயில்களில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு – தெற்கு ரயில்வே வெளியீடு!

0
மின்சார, விரைவு ரயில்களில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு - தெற்கு ரயில்வே வெளியீடு!
மின்சார, விரைவு ரயில்களில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு - தெற்கு ரயில்வே வெளியீடு!
மின்சார, விரைவு ரயில்களில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு – தெற்கு ரயில்வே வெளியீடு!

பராமரிப்பு பணிகள் காரணமாக நெல்லூர்- சூலூர் பேட்டை, காரைக்குடி-எழும்பூர் உள்ளிட்ட பல எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

நேர மாற்றம்:

இந்தியாவில் கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெரும்பாலான ரயில்கள் பயணிகள் வருகை இன்றி ரத்து செய்யப்பட்டது. இதனால் பொது மக்களும், கொரோனா நோய் தடுப்பு ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து கொரோனா தடுப்பு பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்காக குறிப்பிட்ட ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்ததது. இந்த நேரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கியது. அப்போது முன்பதிவு அடிப்படையில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவ்வப்போது ரயில்களில் அல்லது தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் தற்போது நெல்லூர் – சூலூர் பேட்டை இடையே காலை 10.15 மணிக்கும், சூலூர்பேட்டை-நெல்லூர் இடையே காலை 7.50 மணிக்கும் சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் – சூலூர்பேட்டை இடையே காலை 5.20 மணிக்கும், சூலூர்பேட்டை-சென்டிரல் இடையே மதியம் 12.35 மணிக்கும், ஆவடி – சென்டிரல் இடையே காலை 4.25 மணிக்கும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் திருப்பதி-சென்டிரல் (வண்டி எண்:16054) இடையே காலை 10.10 மணிக்கும், எம்.ஜி.ஆர் சென்டிரல்-திருப்பதி இடையே மதியம் 2.15 மணிக்கும் இயக்கப்படும் விரைவு ரயில்கள் மே 24, 25, 31ம் தேதிகளிலும் ஜூன் மாதம் 1,7,8ம் தேதிகளிலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

TNPSC Group 2, 2A தேர்வெழுதிய 11.78 லட்சம் பேர் – வினாத்தாள் எளிமையாக இருந்ததாக கருத்து!

சென்டிரல் – பெங்களூரு (12607) இடையே மதியம் 3.30 மணிக்கு புறப்படும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் மே 24, 25, 31ம் தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 7, 8ம் தேதிகளில் சென்டிரல் – காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் காட்பாடியில் இருந்து மாலை 5.35 மணிக்கு இயக்கப்படும் என்றும் அதே போல சென்டிரல் – மைசூர் இடையே மதியம் 1.35 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் மே 24, 25, 31ம் தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 7, 8ம் தேதிகளில் சென்ட்ரல் – காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சென்ட்ரல் – கோவை (12679) இடையே மதியம் 2.30 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 24, 25, 31-ந் தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 7, 8ம் தேதிகளில் சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் இந்த ரயில் காட்பாடியில் இருந்து மாலை 4.20 மணிக்கு இயக்கப்படும். அடுத்ததாக சென்டிரல் – சாய்நகர் சீரடி இடையே காலை 10.20 மணிக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர விரைவு ரெயில் வருகிற 25ம் தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 8ம் தேதிகளில் 2 மணி 25 நிமிடம் தாமதமாக மதியம் 12.45 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here