LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு – Missed Call மூலம் ஆர்டர் செய்வது எப்படி?

0
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு - Missed Call மூலம் ஆர்டர் செய்வது எப்படி?
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு - Missed Call மூலம் ஆர்டர் செய்வது எப்படி?
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு – Missed Call மூலம் ஆர்டர் செய்வது எப்படி?

இந்தியாவில் அனைவரின் வீட்டிலும் சமையலுக்கு தேவையான ஒன்றான சிலிண்டர் உள்ளது. இந்த சிலிண்டரை தற்போது மாதம் ஒரு முறை அல்லது 2 மாதங்களுக்கு ஒரு முறை என்று வாங்க வேண்டியிருக்கும். தற்போது மிஸ்டு கால் மூலமாக சிலிண்டர் புக்கிங் செய்து சுலபமாக வாங்கலாம். இதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

சிலிண்டர்

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் அனைத்து வீட்டுக்கும் தேவையான ஒன்றாக உள்ளது. கொரோனா கால கட்டத்தில் இதன் விலை ஒவ்வொரு மாதமும் புதிய உச்சத்தை தொட்டது. அத்துடன் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்வு ஏற்பட்டது. அதனால் சாதாரண மக்கள் மிகவும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்தனர். இப்போது கொரோனா பரவல் குறையத் தொடங்கியதில் இருந்து படிப்படியாக சிலிண்டர் எரிவாயுவின் விலையும் குறைந்து கொண்டே வருகிறது. பொதுவாக சிலிண்டர் மாதம் ஒரு முறை அல்லது 2 மாதங்களுக்கு ஒரு முறை என மாற்ற வேண்டியிருக்கும்.

Exams Daily Mobile App Download

தற்போது சிலிண்டர் பெறுவதற்கு பல வழிகள் உள்ளது. இதில் தற்போது மிஸ்டு கால் மூலமாக சிலிண்டர் பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம். அத்துடன் புக்கிங் செய்யும்போது நீங்கள் தங்கள் நிறுவனத்துடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் வேறு நம்பர் பயன்படுத்தினால் உங்களால் புக்கிங் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முதலாவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்திடம் சிலிண்டர் பெற நினைப்பவர்கள் 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!

அதன்பின் ஓரிரு நாட்களில் சிலிண்டர் வீட்டிற்கே கொண்டு வரப்படும். மேலும் புதிய சிலிண்டர் இணைப்பை பெறுவதற்கும் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இதே போல் இண்டேன் நிறுவனத்திடம் சிலிண்டர் வாங்க நினைப்பவர்களும் தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். அத்துடன் இந்த வசதி புதிய வாடிக்கையாளர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 758888882 என்ற வாட்ஸ் ஆப் நம்பருக்கு ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தலாம். இதனை தொடர்ந்து HP சிலிண்டர் வாங்க வேண்டும் என்று விரும்புவர்கள் 94936 02222 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து புக்கிங் செய்து சிலிண்டரை வீட்டிற்கே வர வைக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!