Infosys நிறுவன ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – Variable Pay குறைப்பு!

1
Infosys நிறுவன ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு - Variable Pay குறைப்பு!
Infosys நிறுவன ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு - Variable Pay குறைப்பு!
Infosys நிறுவன ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – Variable Pay குறைப்பு!

Infosys நிறுவனத்தில் நினைத்ததை காட்டிலும் ஜூன் வரையிலான காலாண்டிற்கான மார்ஜின் அளவு மிகவும் குறைந்துள்ளதால் வேரியபிள் பே தொகையும் 70% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Infosys நிறுவனம்:

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டிற்கும் ஊழியரின் செயல் திறன் அடிப்படையில் வேரியபிள் பே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனம் நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்கு வேரியபிள் பே முறையை நிறுத்தலாம் என முடிவு செய்துள்ளது. அதாவது, வேரியபிள் பே காரணமாக மார்ஜின் அழுத்தம் இருப்பதாலும் வேரியபிள் பே முறையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் புதிய மற்றும் இளநிலை ஊழியர்களுக்கு 30 சதவீத பிடிக்கப்பட்ட பின்னர் நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்கு 70% வேரியபிள் பே வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மார்ஜின் அழுத்தம் மட்டுமல்லாமல் ஊழியர்களின் திறன் குறைதல் மற்றும் தொழில்நுட்பங்களில் நினைத்த அளவிற்கு லாபம் கிடைக்காத காரணத்தினாலும் வேரியபிள் பே ரத்து செய்யப்பட்டுள்ளது. விப்ரோ நிறுவனத்தை தொடர்ந்து டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனமும் காலாண்டிற்கு உண்டான வேரியபிள் பே தொகையை ஒரு மாதத்திற்கு பிறகு வழங்க திட்டமிட்டுள்ளது.

NLC இந்திய நிறுவனத்தில் உதவித்தொகையுடன் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்நிலையில், இன்போசிஸ் நிறுவனமும் காலாண்டிற்கான வேரியபிள் பே தொகையை குறைத்துள்ளது. அதாவது, ஊழியர்களுக்கு ஜூன் காலாண்டுக்கான வேரியபிள் பே தொகை 90 சதவீதமாக வழங்கப்பட்டது. ஆனால், தற்போது வேரியபிள் பே தொகை 70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, இன்போசிஸ் நிறுவனத்தின் மார்ஜின் அளவு 21 முதல் 23 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் காலாண்டில் மார்ஜின் அளவு 20 சதவீதமாக குறைந்துள்ளதால் வேரியபிள் பே தொகை 70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!