10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு!

0
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு!
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு!
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு!

கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் தான் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மஹாராஷ்டிராவில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2022 – 2023 ம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கால அட்டவணை:

நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் பரவ தொடங்கிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேரடி வகுப்புகள் நடைபெறாததால் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதிலும் சிக்கல் எழுந்தது. அதனால் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டே அடுத்த வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது.

பிறகு ஓரளவு கொரோனா பெருந்தொற்று குறைந்ததன் காரணமாக மாணவர்களுக்கு நேரடி கல்வியை அளிக்கும் நோக்கிலும் 2021 – 2022 ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்ற இலக்குடனும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. முதல் கட்டமாக மேல்நிலை வகுப்புகள் செயல்பட தொடங்கியது. இந்த நிலையில் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் செய்து கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 10,12ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த தேர்வுகள் முடிந்த பிறகு தேர்வு கால மற்றும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்த அரசு – 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

Exams Daily Mobile App Download

இந்த விடுமுறைக்கு பிறகு 2022 – 2023 ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் நடைபெற தொடங்கியது. தற்போது வழக்கம் போல அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வேளையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு பிப்ரவரி 21ம் தேதி தொடங்கி மார்ச் 20ம் தேதி வரை நடைபெறும் என்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!