தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சனிக்கிழமை விடுமுறை? அரசு விளக்கம்!

4
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - சனிக்கிழமை விடுமுறை? அரசு விளக்கம்!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - சனிக்கிழமை விடுமுறை? அரசு விளக்கம்!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சனிக்கிழமை விடுமுறை? அரசு விளக்கம்!

தமிழகத்தில் பள்ளி நாட்கள் தவிர விடுமுறை நாட்களில் மாணவர்களை வகுப்புகளுக்கு வர சொல்ல கூடாது எனவும், அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.

விடுமுறையில் வகுப்பு :

கொரோனா பாதிப்பு குறைந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடந்த ஜூன் மாதம் முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்கு செல்வதால் அதீத ஆர்வத்துடன் சென்று வருகின்றனர். மேலும், நடப்பு கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை விடப்படும் என பள்ளி கல்வித் துறை ஏற்கனவே அறிவித்திருந்தும் சில பள்ளிகளில் விடுமுறை நாளான சனிக்கிழமை அன்றும் வகுப்புகள் எடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

சிகரெட் பாக்கெட்டுகளில் திடீர் மாற்றம் – டிசம்பர் 1 முதல் புதிய சுகாதார எச்சரிக்கை படம்!

அதாவது நடப்பு கல்வியாண்டில் இருந்து கொரோனா கால அட்டவணை போல் இல்லாமல் வழக்கம் போல் பள்ளிகள் அனைத்தும் செயல்படத் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில், ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் பள்ளி விடுமுறை நாளாகவும் அறிவித்தது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது திடீரென எழுந்துள்ள இந்த புகாரால் பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exams Daily Mobile App Download

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடக்கும் என்றும், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. மேலும், பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்களை பள்ளிக்‍கு வரவழைக்‍க வேண்டும் எனவும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்கக் கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. தனியார் பள்ளிகள் சனிக்கிழமை பள்ளி நடத்துவதை நிறுத்துவதில்லை.

  2. விதிமுறைகளை எந்த பள்ளியும் கடைபிடிப்பது இல்லை

  3. Strict monitoring is essential….
    No rules for private schools????
    Tamil Nadu Government should control the private schools also…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!