பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இது கட்டாயம்!

0
பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இது கட்டாயம்!
பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இது கட்டாயம்!
பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இது கட்டாயம்!

இந்தியாவில் ஆதார் – பான் இணைப்பு இல்லாமல் வாடிக்கையாளர்கள் வங்கிகள் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது என பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.

ஆதார்- பான் இணைப்பு :

இந்தியாவில் தனி நபரின் அடையாளமாக விளங்கும் ஆதார் அட்டை முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும். அரசின் நல திட்டங்களில் இணையவும், வங்கி கணக்கு தொடங்கவும், பான் கார்டு பெறவும், பள்ளி ,கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற இடங்களிலும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனிநபர் சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண் அவசியமாக உள்ளது. ஆதாருக்கு அடுத்த நிலையில் முக்கிய ஆவணமாக பான் கார்டு விளங்குகிறது. 10 இலக்க எண்களை கொண்ட நிரந்தர கணக்கு எண் பான்கார்டு ஆகும்.

ஊரடங்கு தளர்வுகள் – சுற்றுலா பயணிகள் வருகை தொடக்கம் !!

அனைத்து வங்கி பரிவர்தனைகளுக்கும், அரசின் வரிகளை செலுத்துவதற்கும் பான் அவசியமாகும். வரி ஏய்ப்பை தடுக்கவும், கடன் மோசடிகளை குறைக்கவும் பான் கார்டுகளுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதார் மிக முக்கியமான அடையாள ஆவணம் என்பதால் பெரும்பாலான வங்கிகள் ஆதார் – பான் கார்டு இணைப்பை கட்டாயமாக்கியுள்ளன. வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆதார் – பான் கார்டுகளை இணைக்கும்படி பேங்க் ஆப் இந்தியா கேட்டு கொண்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

பான் – ஆதார் இணைப்புக்கான கால அவகாசத்தையும் மத்திய அரசு தொடர்ந்து நீட்டித்து வருகிறது. கடைசியாக ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தற்போது இணைப்புக்கான கடைசி நாள் செப்டம்பர் 30 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதாருடன் பான் இணைக்கபடாவிட்டால் பான் கார்டு செயலிழந்துவிடும். அதன் பின்னர் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும் என்று பேங்க் ஆப் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here