ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – UIDAI அறிக்கை!

0
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - UIDAI அறிக்கை!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - UIDAI அறிக்கை!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – UIDAI அறிக்கை!

ஆதார் கார்டு என்பது ஒரு தனி மனிதனுக்கு வழங்கப்பட்ட ஒரு இன்றியமையாத ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் கார்டை வைத்து பல மோசடிகள் செய்வதாக தகவல் வந்துள்ளது. அதனால், UIDAI முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆதார் கார்டு

ஆதார் அடையாள அட்டை ஒருவரது வாழ்நாள் முழுவதும் பயன்படக்கூடியது. ஆதார் கார்டை வைத்து வங்கிக் கணக்கைத் தொடங்க, ஓட்டுநர் உரிமத்தை பெறவும் மற்றும் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது, கோவிலுக்கு செல்ல மற்றும் மொபைல் வாங்க, சிம் கார்டு பெற போன்ற பெரும்பாலான சேவைகளைப் பெற ஆதார் அட்டை பயன்படுகிறது. ஒரு தனி மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஆதார் கார்டு ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது.

Exams Daily Mobile App Download

இந்த ஆதார் கார்டு வைத்து பல மோசடி சம்பவங்களுக்கு அதிகமாக பயன்படுத்தி வருகின்றன. பெரும்பாலான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் போலியான ஆதார் கார்டு பயன்படுத்துதல் மற்றும் ஆதார் நம்பர்களை வைத்து பல இன்னல்களை செய்து வருகின்றனர். எனவே, அதனை தடுப்பதற்காக, UIDAI முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

12 இலக்க ஆதார் எண்ணுடன் உங்கள் செல்போன் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள UIDAI ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆதார் கார்டுடன் தனிப்பட்ட மொபைல் எண் இருக்கிறதா என்பதை கண்டறிய சில டிப்ஸ்களை மத்திய நிதி உதவி அமைப்பு வெளியிட்டுள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கையில் UIDAI ஆதார் கார்டுடன் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பரை இணைந்திருக்க வேண்டும். அப்படி அதில் சந்தேகம் இருந்தால் தனிப்பட்ட மொபைல் நம்பர் இருக்கிறதா என்பதை இந்த UIDAI லிங்கை க்ளிக் செய்யுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!

முதலில் Log in to myaadhaar.uidai.gov.in/verify-email-mobile என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் அதில், ‘Verify Mobile Number’ and ‘Verify Email Address’ என இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படும். உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து, ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.

தொடர்ந்து, மொபைல் நம்பர் அல்லது இமெயில் ஐடியை பதிவிட வேண்டும். இதையடுத்து, Captcha-வை டைப் செய்யுங்கள். அடுத்து, ‘Send OTP’ ஆப்ஷன் கொடுங்கள்.

இப்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP வரும் அப்படி வந்தால் உங்கள் ஆதாருடன் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டது என்பதையும் அப்படி OTP வரவில்லை என்றால் மொபைல் நம்பர் பதிவு செய்யப்படவில்லை என்றும் அறியப்படுகிறது. இதே முறையை பயன்படுத்தி மெயில் மூலம் இமெயில் ஐடி செக் செய்திட முடியும். ஆதார் மோசடியில் இருந்து தப்பிக்க இந்த 5 ஸ்டெப்ஸ்களை ஃபாலோ செய்யுங்கள் என UIDAI தகவல் வெளியிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!