ஆதார் கார்டு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – அப்டேட் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!

0
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு - அப்டேட் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு - அப்டேட் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – அப்டேட் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!

இந்திய குடிமகன் என்பதற்கு முக்கியமான அடையாளமாக இருந்து வரும் ஆதார் கார்டில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதனை உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும். தற்போது எப்படி அந்த பிழைகளை சரி செய்வது என்பது குறித்தான அனைத்து தகவலும் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு:

இந்தியக் குடிமகன் என்பதற்கு முக்கியமான ஆதாரமாக ஆதார் கார்டு விளங்கி வருகிறது. அரசின் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கு ஆதார் கார்டு மிகவும் அவசியமான ஒன்றாகும். அவற்றில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை உடனடியாக ஆன்லைனில் திருத்திக் கொள்ளலாம் அல்லது ஆதார் கார்டு மையத்திற்கு சென்று அந்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும். ரேஷன் கார்டில் பிழைகள் இருப்பின் எதிர்காலத்தில் இதன் மூலமாகவே பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும். இதனால் உடனடியாக ஆதார் கார்டில் பெயர், முகவரி, மொபைல் எண் ஆகியவற்றில் ஏதேனும் பிழைகள் இருந்தால் உடனடியாக திருத்திக் கொள்ள வேண்டும்.

மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் – முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

ஆதார் கார்டில் பெயரை மாற்றம் செய்வது மொபைல் எண்ணை மாற்றம் செய்வது அல்லது முகவரியில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதனை மாற்றுவது இது குறித்தான பிழைகளை செய்ய விரும்பினால் இதற்கான அதிகாரபூர்வமான இணையதளத்திற்கு சென்று உடனடியாக திருத்திக் கொள்ளலாம் அல்லது ஆதார் மையத்திற்கு சென்று இதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டில் உள்ள பிழைகளை சரி செய்ய விரும்புவர்கள் முதலில் யுஐடிஏஐ என்கிற அதிகாரபூர்வமான இணையதள முகவரிக்கு சென்று ஆதார் சேவை பிரிவில் உள்ள சுய சேவை புதுப்பிப்பு விருப்பத்தை கிளிக் செய்து 12 இலக்க ஆதார் எண்ணை இங்கு பதிவிடவும், இதற்குப் பிறகு கேப்ட்சா பாதுகாப்பு குறியீட்டையும் பதிவிட வேண்டும்.

Exams Daily Mobile App Download

அனைத்து விவரங்களையும் பதிவிட்ட பின்பு ஓடிபி என்கிற பகுதியை கிளிக் செய்யவும். இதன் பின்பு புதிய பக்கம் ஒன்று திறக்கப்படும் அதில் தரவை புதுப்பிக்க கிளிக் செய்து பிராந்திய மொழிகளை தேர்ந்தெடுத்து விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம். அதன் பிறகு உங்களது மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். அதை பதிவிட்ட பிறகு தொடரவும் பட்டனில் டேப் செய்ய வேண்டும். இந்த வழிமுறைக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இது மட்டுமல்லாமல் யுஐடிஏஐ மையத்திற்குச் சென்றும் ஆதாரை புதுப்பித்துக்கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!