ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – அப்டேட் செய்வது குறித்த விபரங்கள்!

0
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - அப்டேட் செய்வது குறித்த விபரங்கள்!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - அப்டேட் செய்வது குறித்த விபரங்கள்!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – அப்டேட் செய்வது குறித்த விபரங்கள்!

இந்தியாவில் ஆதார் அட்டை தனிநபர் அடையாள அட்டைகளுள் முதன்மையானதாக உள்ளது. அதனால் இதில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். ஏதேனும் தவறான விவரங்கள் இருந்தால் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இதில் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே திருத்தங்களை மேற்கொள்ள முடியும். இது பற்றி முழுமையான விவரங்களை பார்ப்போம்.

ஆதார் அட்டை:

இந்தியாவில் ஆதார் அட்டை சார்ந்து அனைத்து பயன்பாடுகளுக்கும் இன்றியமையாததாக உள்ளது. இதையடுத்து அரசின் நலத்திட்டங்களும் ஆதார் கார்டு மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் இதில் இடம் பெற்றிருக்கும் விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அனைவர்க்கும் ஆதார் அட்டையை வழங்குகிறது. இதில் உள்ள விவரங்கள் டெமோகிராஃபிக் மற்றும் பயோமெட்ரிக் தகவல் என இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதில் டெமோகிராஃபிக் தகவலில் பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது வயது, பாலினம், மொபைல் எண், இமெயில் முகவரி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும். இதனை தொடர்ந்து பயோமெட்ரிக் தகவலில் ஐரிஸ், விரல் ரேகை பதிவு மற்றும் முக அடையாள புகைப்படம் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும். அதன்படி இந்த தகவல்களும் தங்களின் ஆவணங்களில் உள்ள தகவல்களும் மாறுபாடின்றி சரியானதாக இருக்க வேண்டும்.


இதில் ஏதேனும் உங்களின் விவரங்கள் சரியானதாக இல்லை என்றாலோ அல்லது முகவரி, பெயர் உள்ளிட்டவை மாற்ற வேண்டும் என்றாலோ UIDAI ஆணையம் மாற்றங்களை செய்ய அனுமதி வழங்குகிறது.

ஆதார் அட்டையில் விவரங்களை மாற்றுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு UIDAI ஒரு குறிப்பிட்ட வரம்பை நிர்ணயித்துள்ளது.

1. பெயர் : பெயர் மாற்றத்தை 2 முறை மட்டுமே திருத்தங்களை மேற்கொள்ள முடியும். அதிலும் இதில் சிறிய அளவிலான திருத்தங்களை மட்டுமே மேற்கொள்ள முடியும்.

2. பாலினம் : இதில் ஒரு முறை மட்டுமே திருத்தங்களை மேற்கொள்ள முடியும். அதனால் முதலில் கொடுக்கும் போது சரியான தகவல்களை கொடுக்க வேண்டும்.

Gpay, Phonepe செயலிகள் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – பாதுகாப்பு வழிமுறைகள் இதோ!

3. முகவரி : ஆதாரில் இடம்பெற்றிருக்கும் முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். இதற்கென்று குறிப்பிட்ட வரம்பு ஏதும் கிடையாது.

4. பிறந்த தேதி : ஆதாரில் இடம் பெற்றிருக்கும் தங்களின் பிறந்த தேதியை ஒரு முறை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!