PM கிசான் நிதியுதவி பெறும் விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு – eKYC அப்டேட் செய்ய மே 22 கடைசி நாள்!

0
PM கிசான் நிதியுதவி பெறும் விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு - eKYC அப்டேட் செய்ய மே 22 கடைசி நாள்!
PM கிசான் நிதியுதவி பெறும் விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு - eKYC அப்டேட் செய்ய மே 22 கடைசி நாள்!
PM கிசான் நிதியுதவி பெறும் விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு – eKYC அப்டேட் செய்ய மே 22 கடைசி நாள்!

பிரதம மந்திரி விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி பெரும் விவசாயிகளுக்கு eKYC செயல்முறையை அப்டேட் செய்ய மார்ச் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது மே 22 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

eKYC அப்டேட்:

இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் பிரதம மந்திரி விவசாயிகள் நிதியுதவி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana) என்கிற ஒரு திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இணையும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரண்டாயிரம் ரூபாய் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கே செலுத்தப்படும். எனவே, ஆண்டிற்கு மட்டுமே 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் 11வது தவணை இந்த மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை – ஜாக்பாட் அறிவிப்பு!

மேலும், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியை பெறுவதற்கு விவசாயிகள் கண்டிப்பாக eKYC செயல்முறையை முடிக்க வேண்டும். இந்த eKYC செயல்முறையை முடிக்காவிடில் நிதியுதவி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுவிடும். எனவே, இந்த உதவி தொகை எந்த பிரச்சனையும் இன்றி வாங்க ஒவ்வொரு PM-KISAN பயனாளிகளும் உடனே PM கிசான் இணையதளத்தில் eKYC செயல்முறையை அப்டேட் செய்துகொள்ள வேண்டும். இந்த செயல்முறையை முடிப்பதற்கு மார்ச் 31 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பலரும் eKYC செயல்முறையை முடிக்காத காரணத்தினால் மே 22 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தற்போது எவ்வாறு eKYC செயல்முறையை அப்டேட் செய்வது என்பதை பார்க்கலாம். முதலில் PM கிசானின் அதிகாரபூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ என்கிற இணையதள முகவரிக்கு சென்று முகப்புப் பக்கத்தின் வலது பக்கத்தில் உள்ள eKYC விருப்பத்தைக் கிளிக் செய்யவும். பின்பு ஆதார் அட்டை எண், கேப்ட்சா குறியீட்டை பதிவு செய்து தேடலை கிளிக் செய்யவும். பின்பு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை பதிவு செய்து, அந்த எண்ணிற்கு OTP வந்ததும் அதனையும் பதிவு செய்யவும். eKYC வெற்றிகரமாக இணைக்க அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும். இல்லையென்றால் ஆதார் சேவை மையத்திற்கு சென்று ஆதார் அட்டையை காண்பித்து eKYC செயல்முறையை செய்துகொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!