EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – UAN நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?

0
EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு - UAN நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?
EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு - UAN நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?
EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – UAN நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?

பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மூலமாக பயனடைந்து வரும் ஊழியர்கள் கட்டாயமாக UAN கணக்கு எண் வைத்திருக்க வேண்டும். தற்போது எப்படி UAN எண்ணை கண்டுபிடிப்பது என்பதை காணலாம்.

UAN எண்:

இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அமைப்பு தான் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பாகும். இந்த அமைப்பு நாடு முழுவதும் உள்ள வருங்கால வைப்பு நிதிகளை ஒழுங்குபடுத்துதல், நிர்வகித்தல் முதலான பணிகளை செய்கிறது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மூலமாக பயனடைந்து வரும் ஊழியர்களுக்கு EPFO யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) கட்டாயமாக்கியது. அதாவது PF கணக்கைக் கொண்ட அனைத்து ஊழியர்களுக்கும் 12 இலக்க யுனிவர்சல் கணக்கு எண் வழங்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் ஐடிகளுக்கும் UAN மைய களஞ்சியமாக செயல்பட்டு வருகிறது. வாழ்நாள் முழுவதும் ஒரு ஊழியருக்கு அதே UAN தான் பயன்பாட்டில் இருக்கிறது. EPF உறுப்பினர்கள் UAN எண்ணை EPFO போர்ட்டல் மூலமாக உருவாக்கி கொள்ளலாம். தற்போது எப்படி UAN எண்ணை அறிந்துகொள்வது என்பதை பார்க்கலாம். அதாவது முதலில் EPFO ன் அதிகாரபூர்வமான https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்கிற இணையதள முகவரிக்கு சென்று அதில் உள்ள UAN ஒதுக்கீடு என்கிற பகுதியை கிளிக் செய்யவும்.

SBI வங்கி நிறுவனத்தில் 641 காலிப்பணியிடங்கள் – தகுதி, சம்பளம் உள்ளிட்ட பிற விவரங்கள் இதோ!

பின்பு, மாநில மற்றும் EPFO அலுவலகங்களைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் PF எண், பெயர், பிறந்த தேதி மற்றும் தொலைபேசி எண் போன்ற அனைத்து விவரங்களையும் பதிவிட வேண்டும். அதில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட வேண்டும். அதில், Captcha ஐ உள்ளிட்டு OTP ஐ உருவாக்கவும் என்கிற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்ட பிறகு OTP ஐ உள்ளிட்டு சமர்ப்பி என்கிற பகுதியை கிளிக் செய்யவும். OTP எண்ணை பதிவிட்டதும் UAN எண்ணை கண்டுபிடித்து விடலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!