தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி குறித்து வெளியான முக்கிய செய்தி – அமைச்சர் வெளியிட்ட தகவல்!

0
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி குறித்து வெளியான முக்கிய செய்தி - அமைச்சர் வெளியிட்ட தகவல்!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி குறித்து வெளியான முக்கிய செய்தி - அமைச்சர் வெளியிட்ட தகவல்!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி குறித்து வெளியான முக்கிய செய்தி – அமைச்சர் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் மதுரை மாவட்ட அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்திப் பெற்றது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிகள்:

தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பிரசித்தி பெற்றது. ஜல்லிக்கட்டை தடை செய்வதாக அரசு அறிவித்த போது, சென்னை மெரினாவில் மக்கள் திரண்டு போராட்டம் நடத்தியது அனைவராலும் எளிதில் மறந்திருக்க முடியாது. இந்நிலையில் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த பெரிய அளவில் உலகத்தரம் வாய்ந்த மைதானம் கொண்டுவரப்படும் என அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் இந்த ஆண்டு வழக்கம் போல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என தெரிவித்தார். கொரோனா காலத்தில் பல கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இனி வரும் காலங்களில் ஜல்லிக்கட்டை ஒரு விளையாட்டாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களா நீங்கள்.. உங்களுக்கான முக்கிய அறிவிப்பு – இனி சேவை இலவசம்!

Exams Daily Mobile App Download

மக்களால் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு ஜல்லிக்கட்டு என்பதால் அதனை நல்ல முறையில் கொண்டு வர அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் உலகத்தரத்தில் அமைக்க இரவு பகல் பார்க்காமல் பணிகள் நடைபெறும் என அவர் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டிற்குள் இந்த பணிகள் நடத்தி முடிக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here