மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு – ஓராண்டு கால சேவை கட்டாயம்… முதல்வர் அறிவிப்பு!
புதுச்சேரியில் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு முதல்வர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி படிப்பை முடித்து பட்டம் பெற்ற மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஓர் ஆண்டு சேவை
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர மத்திய அரசால் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாநில மற்றும் மத்திய கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர முடியும். நடப்பு ஆண்டு நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் சிறப்பாக நடைபெற்று.அதனை தொடர்ந்து தற்போது மாணவர் சேர்க்கைகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி மருத்துவம் படித்து முடித்து பட்டம் பெற்ற இறுதி ஆண்டு மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் ஓராண்டு காலம் பணியாற்ற வேண்டும் மக்களுக்காக ஓராண்டு சேவை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
காலை 8.30 மணிக்கு மேல் பள்ளி பேருந்துகளுக்கு அனுமதி கிடையாது – போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு!!
Follow our Instagram for more Latest Updates
நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய அவர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு அறுவை சிகிச்சைகள் செய்வதற்காக நிதி ஒதுக்கி உள்ளோம். மேலும் சிறந்த அறுவை சிகிச்சை கூடமும் அமைக்கப்படும். மேலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ பிரிவில் புதிய பாடப்பிரிவு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளார்.