அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் – பள்ளிக்கல்வி துறை உத்தரவு!

0
அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் - பள்ளிக்கல்வி துறை உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் - பள்ளிக்கல்வி துறை உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் – பள்ளிக்கல்வி துறை உத்தரவு!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி புரிந்து வந்தால் அவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை அரசு வெளியிட்டுள்ளது.

அரசாணை வெளியீடு:

தமிழக பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில், தனியார் பள்ளிகள் மற்றும் ஆரம்ப பள்ளிகளுக்கு என்று தனியாக கல்வித்துறை அதிகாரிகளை நிர்ணயிக்க உத்தரவிட்டுள்ளது. இதனால், புதிய ஆணையின் படி, புதிதாக அரசு அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு துறை பணியாளர்கள்‌ மூன்று வருடத்திற்கு மேல்‌ ஒரே அலுவலகத்தில்‌ அல்லது பணியிடத்தில்‌ பணிபுரியும் பட்சத்தில்‌ அவர்களை மாறுதல்‌ செய்திட நெறிமுறைகள்‌ வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஆணையில், பள்ளிக்கல்வித்துறையில்‌ பணிபுரியும்‌ அனைத்து பணியாளர்களும்‌ புதிய உத்வேகத்துடன்‌ செயல்படத்‌ தக்கவகையிலும்‌, அனைத்து அலுவலகங்களும்‌ எவ்வித புகாருக்கும்‌ இடமின்றி செயல்படும்‌ வகையிலும்‌ 01.06.2022 அன்றைய தேதியில், மூன்று ஆண்டுகளுக்கு மேல்‌ பணிபுரியும்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலரின்‌ நேர்முக உதவியாளர்கள்‌, கண்காணிப்பாளர்கள்‌, பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள்‌, உதவியாளர்கள்‌, இளநிலை உதவியாளர்கள்‌ மற்றும்‌ தட்டச்சர்கள்‌ ஆகியோர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணி நியமன மாறுதல் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கலந்தாய்வில் மேற்கொள்ளப்பட வேண்டிய நெறிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. நவம்பர் மாதம் முதல் அமல் – தீர்ப்பை வரவேற்கும் மக்கள்!

கலந்தாய்வு நெறிமுறைகள்:

மாவட்டக்‌ கல்வி அலுவலகங்களில்‌ பணிபுரியும்‌ அனைத்து பணியாளர்களுக்கும்‌ தங்கள்‌ மாவட்டத்தில்‌ நடைபெறும்‌ மாறுதல்‌ கலந்தாய்வில்‌ கலந்து கொண்டு, மாறுதல்‌ பெற அறிவுறுத்த வேண்டும்‌.

கோயம்புத்தூர்‌ மற்றும்‌ மதுரை மண்டல கணக்கு (தணிக்கை) அலுவலகத்தில்‌ பணிபுரியும்‌ அனைத்துப்‌ பணியாளர்களுக்கும்‌ மாறுதல்‌ கலந்தாய்வில்‌ சம்பந்தப்பட்ட மாவட்டங்களில்‌ தவறாமல்‌ கலந்துகொள்ள வேண்டும்‌.

Exams Daily Mobile App Download

அனைத்து மாவட்டத்திலும்‌ உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும்‌ மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவனம்‌ மற்றும்‌ ஒன்றிய ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவனம்‌ ஆகியவற்றில்‌ பணிபுரியும்‌ கண்காணிப்பாளர்களும்‌ தவறாமல்‌ கலந்தாய்வில்‌ கலந்து கொண்டு புதிய பணியிடத்தை தேர்வு செய்ய அறிவுறுத்த வேண்டும்‌.

பட்டியலில்‌ உள்ளபடி மாறுதல்‌ கலந்தாய்வின்போது கலந்துகொள்ள வேண்டிய பணியாளர்கள்‌, கலந்து கொள்ளாத நிலையில்‌ அப்பணியாளர்களுக்கு நிர்வாக மாறுதல்‌ அளிக்கப்படும்‌.

01.06.2022 அன்றைய நிலையில்‌ பிற அலுவலகங்களில்‌ ஒரே பணியிடத்தில்‌ 3 ஆண்டுகளுக்கு மேல்‌ பணிபுரியும்‌ அனைத்து பணியாளர்களைத்‌ தங்கள்‌ மாவட்டத்திற்குள்‌ கலந்தாய்வு நடத்தி பிற அலுவலகங்களுக்கு மாறுதல்‌ வழங்கப்பட வேண்டும்‌.

மேற்கண்ட மாறுதல்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ பட்டியலில்‌ குறிப்பிடப்பட்ட நாட்களில்‌ மேற்கொள்ளப்பட வேண்டும்‌.

மூன்றாண்டு பணிமுடித்த பணியாளர்கள்‌ கட்டாய மாறுதலுக்குத்‌ தகுதியுடையவராய்‌ இருந்த போதிலும்‌ சில பணியாளர்கள்‌ எதிர்வரும்‌ பதவி உயர்வு முன்னுரிமைப்‌ பட்டியலில்‌ இடம்பெற்றிருப்பாராயின்‌ அப்பணியாளர்களுக்கு மூன்றாண்டுகளுக்கான மாறுதல்‌ அளிக்கத்‌ தேவையில்லை.

மேற்கண்ட நெறிமுறைகளை முறையாக கடைபிடித்து, அரசின் ஆணையை நிறைவேற்ற அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளி கல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!