TNPSC குரூப் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய தகவல் வெளியீடு!

1
TNPSC குரூப் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - முக்கிய தகவல் வெளியீடு!
TNPSC குரூப் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - முக்கிய தகவல் வெளியீடு!
TNPSC குரூப் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய தகவல் வெளியீடு!

தமிழகத்தில் தலைமை செயலகத்தில் உள்ள 161 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் அரசு குரூப் 5A தேர்வுகளை நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுக்கு வருகிற 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 5 A தேர்வு:

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் TNPSC குரூப் 1,2,4 ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் இதற்கான கால அட்டவணைகள் மற்றும் தேர்வுக்கான பாடப்பகுதிகளை வெளியிட்டும் அரசு தேர்வர்களுக்கு வழிவகை செய்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தலைமை செயலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் குரூப் 5 தேர்வுகள் நடத்தப்படும் என்று கடந்த மாதம் 23ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் சட்டம் மற்றும் நிதி சாராத பிரிவு உதவி அலுவலர் பதவிக்கு 74 காலியிடங்கள் உள்ளன. இதில் நிதிப்பிரிவு உதவி அலுவலர் பணியிடங்களுக்கு 29 காலியிடங்களும், சட்டம் மற்றும் நிதி சாராத உதவியாளர் பணியிடங்களுக்கு 49 காலியிடங்களும், நிதி உதவியாளர் பணியிடங்களுக்கு 9 காலியிடங்களும் நிரப்ப TNPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்கள் எந்தெந்த பிரிவினருக்கு ஒதுக்கப்படும் விவரங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (செப்.7) ‘இந்த’ பகுதிகளில் மின்தடை – முழு List இதோ!

தலைமை செயலகத்தில் நிதி சாராத உதவி அலுவலர் மற்றும் நிதிப்பிரிவு உதவி அலுவலர் பணிகளுக்கு மாத ஊதியமாக ரூ. 36,400 முதல் ரூ. 1,34,200 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிதி மற்றும் நிதி சாராத உதவியாளர் பணிகளுக்கும், நிதி உதவியாளர் பணிகளுக்கும் ஊதியமாக ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.73,700 வரை இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த மாதம் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்வு டிசம்பர் 18ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!