WhatsApp பயனர்களுக்கு முக்கிய தகவல் – ஈசியா மெசேஜ் அனுப்ப புதிய அம்சம்!

0
WhatsApp பயனர்களுக்கு முக்கிய தகவல் - ஈசியா மெசேஜ் அனுப்ப புதிய அம்சம்!
WhatsApp பயனர்களுக்கு முக்கிய தகவல் - ஈசியா மெசேஜ் அனுப்ப புதிய அம்சம்!
WhatsApp பயனர்களுக்கு முக்கிய தகவல் – ஈசியா மெசேஜ் அனுப்ப புதிய அம்சம்!

உலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்று. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் கொண்டுள்ளது. வீடியோ, போட்டோ, கோப்புகள் என பல முக்கிய விஷயங்கள் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படுகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் அப்டேட்டுகள் விடப்பட்டு செயலியின் பாதுகாப்பு அம்சம் அதிகரிக்கப்படுகிறது.

புதிய அம்சம்:

உலகளவில் மிகவும் பிரபலமான செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. இந்தியாவில் மிகப்பெரிய எண்ணிக்கையில் யூசர்களைக் கொண்டுள்ளது. கொரோனா வருகையால் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பணிகள் மிகவும் துரிதப்படுத்தப்பட்டு இருக்கும் நேரத்தில், ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் என்று இரண்டு தரப்பினருக்குமே, வாட்ஸ்அப் பயனுள்ள கருவியாக செயல்படுகிறது. வாட்ஸ்அப் செயலி, பயனர்களை கவரும் வண்ணம் புதிய புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் சோதனை செய்யப்பட்டு வரும் புது அம்சம் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி வாட்ஸ்அப் செயலியில் சாட் செய்ய காண்டாக்ட்களை சேவ் செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. வழக்கமாக வாட்ஸ்அப் செயலியில் மற்றவர்களுடன் உரையாட காண்டாக்ட் மொபைல் போனில் சேமித்து வைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உடன் HRA உயர்வு? முழு விவரம் இதோ!

இதுதவிர வாட்ஸ்அப் பீட்டா செயலியில் ஏற்கனவே வாய்ஸ் நோட் அம்சத்தை மேம்படுத்தும் ஆப்ஷ்ன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நடைமுறையை மாற்றும் வகையில்ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் சோதனை செய்யப்பட்டு வரும் புது அம்சம் உருவாக்கப்பட்டு உள்ளது. நாம் ஒருவருக்கு வாட்ஸ்அப் -ல் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால் அந்த நமபரை சேவ் செய்திருக்க வேண்டும். தற்ப்போது அன்-சேவ்டு காண்டாக்ட் ஆப்ஷனை கிளிக் செய்யும் போது புதிதாக பாப்-அப் ஆப்ஷன் காணப்படுகிறது. சில பீட்டா பயனர்களுக்கு அதிகபட்சம் 2GB வரையிலான மீடியா ஃபைல்களை அனுப்பும் வசதி வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டதை தொடர்ந்து சேவ் செய்யப்படாத காண்டாக்ட்களுக்கும் குறுந்தகவல் அனுப்பும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை – மாதம் ரூ.62,000 வரை ஊதியம்!

இந்த புதிய அம்சம் வாட்சப் பயனர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புதிய அம்சம் மூலம் ஒருவரின் காண்டாக்ட் நம்பரை சேவ் செய்யாமலேயே அவருடன் சாட் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அப்டேட் மிக எளிதில் அதிவேகமாகவும் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர். உலகத்தில் அதிக தகவல்களை வாட்சப் மூலமாகதான்அனுப்பி கொண்டு இருக்கிறோம். சிறுவர் முதல் பெரியவர் அவரை அனைவரும் வாட்சப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி அதிக நேரத்தை மிச்சப்படுத்தும் அம்சமாகவும் இருக்கிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் அனைவருக்குமான ஸ்டேபில் அப்டேட்டில் கிடைக்க மேலும் சில காலம் ஆகும் என்றே தெரிகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!