ரயில் பயணிகளுக்கான முக்கிய தகவல் – IRCTC புதிய அறிவிப்பு!

0
ரயில் பயணிகளுக்கான முக்கிய தகவல் - IRCTC புதிய அறிவிப்பு!
ரயில் பயணிகளுக்கான முக்கிய தகவல் - IRCTC புதிய அறிவிப்பு!
ரயில் பயணிகளுக்கான முக்கிய தகவல் – IRCTC புதிய அறிவிப்பு!

திருநெல்வேலி முதல் மேட்டுப்பாளையம் இடையேயான வாராந்திர ரயில் சேவை ஆகஸ்ட் 18 ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் ஜனவரி 27 ஆம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவைகள்

இந்தியன் ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக அவ்வப்போது கூடுதல் சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக ஒவ்வொரு வியாழக்கிழமையும் திருநெல்வேலி முதல் மேட்டுப்பாளையத்திற்கு இடையேயும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு மாதாந்திர சிறப்பு ரயில் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் இயங்கி வந்தது. பின்னர், இந்த ரயில் இயக்கம் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.

பின்னர், மீண்டும் அந்த வாராந்திர ரயில் சேவையை தொடர வேண்டும் என பயணிகள் அனைவரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தற்போது ரயில்வே நிர்வாகம் பயணிகளின் கோரிக்கையை ஏற்று 2023 ஜனவரி 27 ஆம் தேதி வரைக்கும் திருநெல்வேலி முதல் மேட்டுப்பாளையம் இடையேயான ரயில் சேவை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06030) செப்டம்பர் 1 முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரைக்கும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Jio, Airtel மற்றும் Vi வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இலவசமாக Disney+ Hotstar!

அதே போல, மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06029) செப்டம்பர் 2 முதல் ஜனவரி 27 ஆம் தேதி வரைக்கும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில்களுக்கான முன்பதிவு நேற்று காலை 8 மணி முதல் துவங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில் கோவை, போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழகடையம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!