GATE 2023 தேர்வு குறித்த முக்கிய தகவல் – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

0
GATE 2023 தேர்வு குறித்த முக்கிய தகவல் - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!
GATE 2023 தேர்வு குறித்த முக்கிய தகவல் - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!
GATE 2023 தேர்வு குறித்த முக்கிய தகவல் – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

2023 ஆம் ஆண்டுக்கான பொறியியல் பட்டதாரி திறன் தேர்வுக்கான (GATE) விண்ணப்பபிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது

கால அவகாசம் நீட்டிப்பு

மத்திய அரசு சார்பாக இளங்கலை பொறியியல் படிப்பை முடித்தவர்கள் ME, M.Tech, M.Arc, M.Plan உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் சேருவதற்கு பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (Graduate Aptitude Test in Engineering) நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க இயலும். இந்த தேர்வானது ஐஐடி நிறுவனங்களில் ஒரு நிறுவனமோ அல்லது ஐஐஎஸ்சி எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமோ ஆண்டுதோறும் நடத்துகிறது.

அதன்படி இம்முறை GATE தேர்வானது இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கான்பூர் நிறுவனத்தால் நடத்தப்பட உள்ளது. இந்த GATE தேர்வானது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கட்டங்களாக பிரித்து நடத்தப்படும். அந்த வகையில் அடுத்த 2023-2024ம் கல்வியாண்டில் பிப்ரவரி 4, 5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வானது (GATE ) நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் gate.iitk.ac.in என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

கல்வியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை – நாளை (அக்.06) முதல் விண்ணப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download

அதன்படி இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது GATE தேர்வுக்கான கால அவகாசம் முடிவடைந்துள்ளதால் அக்டோபர் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து GATE தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டை அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்படும் எனவும் இத்தேர்வுக்கான முடிவுகள் மார்ச் 16ம் தேதி அன்று வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!