முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 01

0
318

முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 01

உலக கடித தினம்

  • செப்டம்பர் 1 ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது .
  • உலக கடித தினம் என்றும் அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.
  • உலக கடித தினம் என்பது ஆஸ்திரிலியாவைச் சேர்த்த புகைப்படை கலைஞர் ரிச்சர்ட் சிம்கின் என்பவரால் 2014 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒரு முறையாகும்.
  • கையால் கடிதம் எழுதும் முறையின் காதலரான அவர், ஒரு கடிதம் என்பது இன்றைய மின்னஞ்சல் ஆகியவற்றை விட ஒரு தனிப்பட்ட அனுபவமாக அமையும் என்று கருதுபவர். அதனால்தான் அதனை கொண்டாடும் விதமாக இந்த தினத்தை அனுசரிக்கிறார்.
  • இன்றைய தினத்தில் நமது டிஜிட்டல் தகவல் தொடர்பு முறைகளை கைவிட்டு, நமக்கு பிடித்த ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதுவதே சிறப்பான கொண்டாட்டமாக இருக்கும்.

பூலித்தேவர் பிறந்த தினம் 

  • சுதந்திரப் போராட்ட வீரரான பூலித்தேவர் செப்டம்பர் 1, 1715 ஆம் ஆண்டு பிறந்தார் .
  • பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர்.
  • இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும்  சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
  • தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் எனும் ஊரில் பூலித்தேவன் நினைவைப் போற்றும் வகையில் பூலித்தேவன் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவைகளை அமைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here