முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 09

0

முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 09

உலக அஞ்சல் தினம்

 • உலக தபால் தினம் அக்டோபர் 9 ஆம் தேதி சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகிறது.
 • இது முதன் முதலில் 09.10.1874-ல் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் சர்வதேச தபால் ஒன்றியம் (Universal Postal Union) ஸ்தாபிக்கப்பட்டது.
 • இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 9-ம் தேதி உலக தபால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
 • உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடாக இந்தியாவுள்ளது, இந்திய அஞ்சல் துறை 1764ல் துவக்கப்பட்டது.
 • தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன.
 • உலக அஞ்சல் தின கொண்டாட்டங்கள் நிறைவு பெறும் விதமாக சர்வதேச அஞ்சல் ஒன்றியத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்காக கட்டுரை போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த போட்டிகள் வரும் ஜனவரியில் நடக்கவுள்ளது.

சே குவேரா நினைவு தினம்

பிறப்பு :

சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் அர்கெந்தீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார்.

சே குவேரா  மேற்கோள்கள்:

 • மண்டியிட்டு வாழ்வதை விட நிமிர்ந்து நின்று சாவதே மேல்.
 • நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்!.
 • எல்லா மனிதருக்கும் மனிதம்,அன்பு என்பது சாத்தியமாகும் வரை நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.
 • போருக்குச் செல்லும் போது, கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ சுத்த வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும்.
 • விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம். இல்லையேல் உரம்.
 • விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை.

இறப்பு:

1967 அக்டோபர் 7 அன்று அமெரிக்க ஆதரவு பெற்ற பொலிவிய ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சே குவேரா அக்டோபர் 9 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார்.

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!