முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 05

0

முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 05

உலக ஆசிரியர் தினம்

 • 1994ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் உலக ஆசிரியர் தினம் “யுனெஸ்கோ” நிறுவனத்தின் சிபாரிசுக்கமைய பிரகடனப்படுத்தப்பட்டது.
 • ஐக்கிய நாடுகள் சபையானது உலக ஆசிரியர் தினமான வருடத்தின் அக்டோபர் மாதம் 05ம் திகதியை பிரகடனப்படுத்தியிருந்த போதிலும் இலங்கையில் அக்டோபர் (06) ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது.
 • உலக ஆசிரியர்கள் தினம், “உலகின் கல்வியாளர்களை பாராட்டுவதும் மதிப்பிடுவதும் மேம்படுத்துவதும்” கவனம் செலுத்துவதையும் ஆசிரியர்கள் மற்றும் போதனை தொடர்பான சிக்கல்களைக் கருத்தில் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும்.

உலக புன்னகை தினம்

 • உலக புன்னகை தினம் என்பது அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை
  கொண்டாடப்படுகிறது.
 • புன்னகை என்பது மனிதனோடு கூடப்பிறந்த ஒரு உணர்வின் வெளிப்பாடு. ஆரோக்கியமான மனிதனிடமிருந்து வெளிப்படுகிறது.
 • இது மனிதனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
 • ஹார்வே பால் ( Havey Ball) என்பவர் 1963- இல் புன்னகை முகம் (Smiley) என்ற குறியீட்டை1963 இல் அறிமுகம் செய்தார்.
 • இதனைத் தொடர்ந்து உலக புன்னகை தினம் 1999-ஆம் ஆண்டிலிருந்து
  கொண்டாடப்படுகிறது.

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!