முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 28

0
முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 28

பில் கேட்ஸ் பிறந்த தினம்
  • வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) அமெரிக்காவின் சியாட்டில், வாஷிங்டன் நகரில் அக்டோபர் 28,1955-ல் பிறந்தார்.இவரது தந்தை வில்லியம் ஹெச்.கேட்ஸ், தாயார் மேரி மேக்ஸ்வெல் ஆவர்.
  • வில்லியம் ஹென்றி கேட்ஸ். 13 வயதில், கணினிக்கான மென்பொருள் எழுத கற்றுக் கொண்டார். 1975ல், தன் நண்பர், பால் எலனுடன் இணைந்து, ‘மைக்ரோசாப்ட்‘ நிறுவனத்தை துவங்கினார்.
  • கணினியை, சாமான்யர்களிடம் சேர்ப்பதில் பெரும் வெற்றி கண்டார்; அதுவே, அவரின் வளர்ச்சிக்கான காரணம்.
  • தி ரோடு அஹெட், பிசினஸ் அட் தி ஸ்பீட் ஆப் தாட் என, இரு புத்தகங்களை எழுதியுள்ளார்; இரு அறக்கட்டளைகளை நிறுவியுள்ளார்
  • 1999 ஆம் வருடம் வெளியான “பைரேட்ஸ் ஆப் தி சிலிகான் வேளி” என்ற திரைப்படத்தில் “ஆப்பிள்” மற்றும் “மைக்ரோசாப்ட்” நிறுவனங்களின் வளர்ச்சியே கதை கருவாக இருந்தது. இப்படத்தில் பில் கேட்ஸ் வேடத்தில் “அண்டோனி மைகேல் ஹால் ” என்ற நடிகர் நடித்தார்.
  • போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார்.

சர்வதேச அனிமேஷன் தினம்

  • சர்வதேச அனிமேஷன் தினம் அக்டோபர் 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
  • அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக ‘சர்வதேச அனிமேஷன் தினம்’ கொண்டாடப்படுகிறது.
  • 1892ல் சார்லெஸ் எமிலி ரெனால்ட் என்பவர் முதன்முதலில் கிரெவின் மியு சியத் திரையரங்கு ஒன்றில் அனிமேஷன் திரைப்படத்தை திரையிட்டதை நினைவுகூறும் விதமாக சர்வதேச அனிமேஷன் தினம் அமைந்துள்ளது.
  • யுனெஸ்கோவின் ஒரு அங்கமான, சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கம் (International Animated Film Association- ASIFA), 2002 ல் இந்நாளை அறிமுகப்படுத்தியது.

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!