முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 20

0

முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 20

பிறப்பு:

 • தொ. மு. சிதம்பர ரகுநாதன் திருநெல்வேலியில் அக்டோபர் 21, 1923ல் பிறந்தார்.

படைப்புகள்:

 • சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர்.
 • பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமரிசனங்கள் யாவும் தமிழில் மார்க்சியசிந்தனைகளை வளர்த்தது.
 • இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றிய இவரது அண்ணன் பாஸ்கர தொண்டைமான் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர். இவரது ஆசிரியர் அ. சீனிவாச ராகவன் இவருக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருந்தார்.
 • இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 1942ல் சிறைக்குச் சென்றார்.
 • 1944ல் தினமணியில் உதவி ஆசிரியராகவும் பின்பு 1946ல் முல்லை என்ற இலக்கியப் பத்திரிக்கையிலும் பணியாற்றினார்.
 • இவரது முதல் புதினமான புயல் 1945ல் வெளியானது.
 • இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கது 1948ல் வெளியான இலக்கிய விமர்சனம்.
 • அதைத் தொடர்ந்து 1951ல் பஞ்சும் பசியும் என்ற புதினத்தை எழுதினார்.

விருதுகள்:

 • சாகித்திய அகாதமி விருது – 1983
 • சோவியத் லேண்ட் நேரு விருது (தாய் மற்றும் லெனினின் கவிதாஞ்சலிக்காக)
 • தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை பரிசு
 • பாரதி விருது – 2001

ராஜம் கிருஷ்ணன் பிறந்த தினம்

பிறப்பு:

 • ராஜம் கிருஷ்ணன் அக்டோபர் 20, 1925 ல் பிறந்தார். மூத்த தமிழக பெண் எழுத்தாளர் ஆவார்.
 • இவருடைய காலத்தின் பெண் அடிமை நிலையையும் மற்ற சமூக அவலங்களையும் இவரின் படைப்புகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

அரசுடைமை:

 • இவரது நூல்கள் தமிழக அரசால் 2009 ஆம் ஆண்டில் அரசுடமை ஆக்கப்பட்டன. இதற்காக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
 • முதன்முறையாக உயிருடன் இருந்தபோதே அரசுடைமை ஆக்கப்பட்டது இவரது நூல்களே.

விருதுகள்:

 • 1950—நியூயார்க் ஹெரால்ட் ட்ரைப்யூன் சர்வதேச விருது
 • 1953—கலைமகள் விருது (நாவல் : பெண் குரல்)
 • 1973— சாகித்திய அகாதமி விருது (நாவல் : வேருக்கு நீர்)
 • 1975—சோவியத் லாண்ட் நேரு விருது
 • 1991—திரு.வி.க. விருது

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here