முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 16

0

முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 16

கட்டபொம்மன்

 • வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார்.
 • இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம்நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையேடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உறுவாக்கினர்.
 • பின் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் வாழ்ந்து வந்தனர், பின்பு முகமதியர்கள் சேர,சோழ,பாண்டிய மன்னர்களின் மீது தாக்குதல் நடத்தி நாட்டை கைப்பற்றி 50ஆண்டுகள் ஆட்சி நடத்தினர், பாண்டிய நாட்டில் கோவிலுகள் இடிக்கப்பட்டது மதுரை மீனாட்சியம்மன் கோவில் அடைக்கப்பட்டது.
 • பாண்டிய நாட்டிலிருந்து உதவிகோரப்பட்டு விஜயநகர பேரரசின் படைகள் வந்த 3நாடுகளும் மீண்டும் கைப்பற்றப்பட்டன. பின்பு பாஞ்சாலங்குறிச்சி ஆண்ட பாண்டிய மன்னன் வீர பாண்டிய கட்ட பெம்மு அவர்களின் முன்னோர்களின் வீரத்தை போற்றி பாஞ்சாலங்குறிச்சியை பரிசாக வழங்கினார்.
கட்டபொம்மன் பெயர் காரணம்
 • அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார்.
 • இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று.
 • ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்.
 • இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியர்.
 • இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார்.
 • இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.
தூக்கிலிடப்பட்ட கயிறு மாயம்
 • ஆங்கிலேயத் தளபதியின் ஆணைப்படி 1799ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் கயத்தாற்றில் தூக்கிலிட பயன்படுத்தப்பட்ட தூக்குக்கயிறு மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகத்தில் (டார்க் ரூம்) பாதுகாக்கப்பட்டது.
 • நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, அதே கட்டிடத்தில்தான் திருமங்கலம் தாலுகா அலுவலகமும் செயல்பட்டு வருகின்கிறது.
 • அங்கிருந்த ஆவணக் காப்பகமும் தாலுகா அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. இதே காப்பகத்தில் தான் ஆங்கிலேயர் காலத்து முக்கிய சம்பவங்கள் தொடர்பான ஆவணங்களும், கட்டபொம்மனை தூக்கிலிட்ட கயிறும் இருந்தது.
 • இந்த காப்பகத்தை பராமரித்து வந்த அலுவலக உதவியாளர், கட்டபொம்மனின் தூக்குக் கயிறு காணாமல்போன விசயத்தை முதலில் சொல்ல, அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை.
 • அந்த உதவியாளரும் பணியிலிருந்து ஓய்வுபெற்று மறைந்துவிட்ட நிலையில், கயிறு உண்மையிலேயே காணாமற் போய்விட்டது என 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் உறுதி செய்துள்ளனர்.

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here