முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 12

0

முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 12

உலக ஆர்த்ரைடிஸ் தினம்

 • ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டு வலிகளில் பெரும்பாலானவை, ஜீன்களால் வருகிறது. அதாவது முன்னோர்களின் மரபணு மூலம் நமக்கும் வருகிறது.
 • சில சமயம் கடுமையான விபத்துக்களால் காலில் ஏற்படும் காயம் காரணமாகவும், ஆர்த்ரைடிஸ் தாக்குகிறது.
 • ஆர்த்ரைடிஸ் நம்மை தாக்கியுள்ளது என்பதை சில எளிய வழிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 • அதாவது கால் மூட்டில் கடுமையான வலி இருப்பது, காலை குறிப்பிட்ட அளவுக்கு மேல் நகர்த்த முடியாமல் இருப்பது, மூட்டுகளில் கடும் எரிச்சல் ஆகியவற்றின் மூலம் அறியலாம்.
 • மேலும் மூட்டுகள் விரைப்பு, வீக்கம், சிவந்திருத்தல், எரிச்சலாக இருக்கும் இடத்தில் தசைகள் மிகவும் தளர்வாக இருத்தால் ஆகியவையும் ஆர்த்ரைடிசுக்கு அறிகுறிகளாகும்.
 • கீல்வாத நோயால் வரும் பெரும்பாலான ஆர்த்ரைடிஸ்கள், உடலின் பெரும்பாலான பாகங்களை தாக்குகிறது.
 • இவை நேரடியாக மூட்டுகளை தாக்காவிட்டாலும், பின்விளைவாக அதை செய்கின்றன. இதனால் சிலருக்கு காய்ச்சல், வீக்கங்கள், உடல் எடை இழப்பு, உடல் நலம் இல்லாததுபோலவே இருப்பதுபோன்ற ஒரு நிலை இருத்தல், நுரையீரல், இதயம், சிறுநீரகங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளிலும் சுணக்கம் இருத்தல் ஆகியவற்றின் மூலம் அவர்களுக்கு ஆர்த்ரைடிஸ் தாக்கியிருப்பதை கண்டறியப்படுகிறது.
 • எலும்பு மூட்டுகளில் ஏற்படும் பிரச்னை பல வயதானவர்களை பாதிக்கிறது. மூட்டுகளிலும் தசைகளிலும் ஏற்படும் வலியும் விரைப்பும் உங்கள் நடமாட்டத்தையே முடக்கக்கூடும்.
 • இதிலிருந்து விடுபட டாக்டர்களிடம் செல்ல வேண்டும். பிஸியோதெரபிஸ்ட்டிடம் சென்றால், இதற்கான சிறப்பு உடற்பயிற்சிகளை சொல்லிக்கொடுப்பார்.
 • நடமாட உதவும் கருவிகளைப் பெறவும் மூட்டுகளைப் பாதுகாக்கவும் ஒரு ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்டிடம் செல்லலாம்.
 • இம்மாதிரியான உதவிகளைப் பெற நல்ல பிஸியோதெரபிஸ்டையோ, ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்டையோ உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பவராக இருக்க வேண்டும்.
 • ஆர்த்ரைடிஸ் என்பது ஆண், பெண், குழந்தைகள், சிறுவயதினர் என்று எல்லா தரப்பினரையுமே தாக்கும்.
 • உலகம் முழுவதும் சுமார் 35 கோடி பேர் ஆர்த்ரைடிஸ்ஸால் தாக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் இந்த எண்ணிக்கை 4 கோடியாக உள்ளது. இதில் 2.50 லட்சம் பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
 • அமெரிக்கர்களில் 2.70 கோடி பேர் கீல்வாதத்தால் தாக்கப்பட்டுள்ளனர். 13 லட்சம் பேர் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 • ஆர்த்ரைடிஸ்ஸால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 65 வயதுக்கு உட்பட்டவர்கள். அமெரிக்காவில் ஆர்த்ரைடிஸ் தாக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
 • இதேபோல், இந்தியாவிலும் ஆண், பெண், குழந்தைகள், சிறுவயதினர் என்று பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 • ஆனால், ஆர்த்ரைடிஸ்ஸை சாதாரணமாக எடுத்து கொள்வதால், பலர் மருத்துவமனைக்கு செல்வதில்லை. இதனால் இந்தியாவில் ஆர்த்ரைடிஸ்ஸால் தாக்கியவர்களின் சரியான புள்ளிவிவரம் கிடைக்காமல் உள்ளது.
 • மேலும், கீழ்வாதத்தால் பாதிக்கப்பட்ட சிலர் மாற்று முறை மருத்துவத்தை தேடுகின்றனர். பல மாத்திரைகள், பத்திய முறைகளைப் பரிந்துரைப்பார்கள். ஏனெனில் கீல்வாதம் வரும் போகும்.
 • உண்மையிலேயே இந்த வைத்திய முறைகள் பலன் அளிப்பதாக சிலர் நம்புகின்றனர். எனவே கீல்வாதத்தை சரி செய்யும் என்று கூறும் மாத்திரைகள் மற்றும் முறைகள் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
 • ஏனெனில் பெரும்பாலான கீல்வாதங்கள் குணப்படுத்த முடியாதவை.

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!