முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 10

0

முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 10

உலக மனநல தினம்

 • உலகம் முழுவதும் அக்டோபர் 10ஆம் தேதி உலக மனநல தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
 • உலக மனநல தினம் 1992 முதல் அக்., 10ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது உடலால் நன்றாக இருந்து, மனதால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளங்களுக்கு, ஆறுதல் அளிக்க வேண்டிய தினம்.
 • இந்தியாவின் 120 கோடி மக்கள் தொகையில் 1000 பேருக்கு 58 பேர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மூளையில் ஏற்படும் ஒரு ரசாயன மாற்றம்தான் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 • 1950ல் இதற்கான மாத்திரை மருந்துகள் இல்லை. ஆனால் தற்போது மாத்திரை, மருந்துகள் இருந்தும் மருத்துவர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவோர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 • மனநல பாதிப்பில் ஆண் பெண் சமமாக உள்ளனர். அதேநேரத்தில் மன அழுத்தத்தில் ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரம் கூறுகிறது.
 • மனநலம் பாதிக்காமல் இருக்க, மனம் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கவேண்டும்.மகிழ்ச்சியாகஇருக்கவேண்டும்.
 • இசைகேட்பது,விளையாடுவது,நண்பர்களுடன்கலந்துரையாடுவது,உடற்பயிற்சி,
  யோகா,தியானம்செய்வது நல்லது. மற்றவர்களுடன் பழகவேண்டும்.தனிமையைத் தவிர்க்க வேண்டும்.

உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்

 • உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் (World Day Against the Death Penalty)  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது.
 • மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு (World Coalition Against the Death Penalty)  என்ற அமைப்பு இந்நிகழ்வை முன்னெடுத்து வருகிறது.
 • இந்த அமைப்பு மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அரச சார்பற்ற அமைப்புகள், வழக்குரைஞர் கழகங்கள், தொழிற் சங்கங்கள், மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் போன்றவற்றின் கூட்டமைப்பாகும்.
 • 2002 மே 13 இல் ரோம் நகரில் கூடிய “மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு” என்ற அரச சார்பற்ற அமைப்புகளின் கூட்டத்தில் மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 • பின் 2003 அக்டோபர் 10 மரண தண்டனை எதிர்ப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!